மாநாடு 14 March 2023
தஞ்சாவூரில் சட்டம் மிகவும் சரியாக அனைவருக்கும் சமமாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. அதாவது மாநகராட்சிக்கு உட்பட்ட சுவர்களில் சுவரொட்டி ஒட்டி இருந்தால் கூட கமிஷனர் கதவை திறந்து கொண்டு வேகமாக வெளிவந்து போஸ்டரை கிழிப்பதும், அது பிஹைன் வுட்ஸ் வலைக்காட்சிகளில் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வந்தது, ஆனால் இதில் என்ன ஒரு செய்தி இருப்பதாக கூறப்படுகிறது என்றால் ஆணையர் அன்றிலிருந்து இன்று வரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக வைக்கப்பட்ட, ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழித்ததே இல்லையாம்.
அதேபோல பொது இடங்களில் பதாகைகள் வைத்தால் வழக்கு போடப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் கூறி இருந்ததாம் அதன் படி இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி பழனிபாபா விதைக்கப்பட்ட நாளன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு திண்டுக்கல்லில் போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கிற மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தினோம் அதற்காக தமிழகம் முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது அதன்படி தஞ்சாவூரில் வைக்கப்பட்ட பேனர்களுக்காக எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குகள் போடப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் மார்ச் மாதம் 1ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததே, அதேபோல இன்று திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பதாகைகளும் கொடிக்கம்பங்களும்
வைக்கப்பட்டிருக்கிறதே அவர்கள் மீது தஞ்சாவூர் மாநகராட்சியும், மாவட்ட நிர்வாகமும், என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, எத்தனை பேர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது என்கிற கேள்வியை எழுப்புகிறார் கம்பம் சாதிக். இதே கேள்வியை தஞ்சாவூர் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்திடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க இருப்பதாக கூறுகிறார் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கம்பம் சாதிக்.
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் என்ன பதிலளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.