திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க மாட்டோம் என திமுகவினர் போராட்டம்.
கோவை மாநகராட்சி 77 வது வார்டில் திமுக சார்பாக ராஜலட்சுமி என்ற வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இந்த வேட்பாளரை மாற்ற வேண்டுமென்று அதே பகுதியை சேர்ந்த திமுக செயலாளர் மதியழகன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பணத்தைப் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாதவர்களுக்கு சீட்டு ஒதுக்கியதாக திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க போவதில்லை என்றும் அவர்கள் முழக்கமிட்டார்கள்.
அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினரை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால், திமுகவினர் கலைந்து போகாமல் தொடர்ந்து முழக்கமிட்டதால்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தார்கள்.
145500cookie-checkதிமுகவினர் போராட்டம் திமுகவிற்கு வாக்கு கேட்க மாட்டோம் என