மாநாடு 31 March 2024
தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மீதும் ,மேயர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் விவரம் பின்வருமாறு :
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி நடக்க இருக்கிறது .இந்திய தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்ற பொது தேர்தல் கான அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டடிருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைளை 24 மணி நேரம் கண்காணிக்க 72 பறக்கும் படை குழுக்கள், 24 நிலையான கண்காணிப்பு குழுக்கள் ,8 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்கு பணம் மற்றும் பரிசு பொருட்களைக் கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
தேர்தல் விதிகளை யாராவது மீறுகிறார்களா எனவும் கண்காணித்து வருகின்றனர்.
தேர்தல் விதிமுறைகளில் ஈடுபடுவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மானம்ப்புசாவடி பகுதியில் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மற்றும் தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் ஆகியவர் நிர்வாகிகளுடன் பிரச்சாரம் செய்தனர் .
அப்போது தஞ்சை சட்டமன்ற எம்எல்ஏ தஞ்சை மாநகராட்சி மேயர் ஆகியோர் சென்ற காரிகளிலும் மற்றும் அவருடன் வந்த 20 மோட்டார் சைக்கிளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக கொடிகளை கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்தனர்.
இது தொடர்பாக தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் மீதும், தஞ்சை மாநகராட்சி மேயர் மீதும், 20 மோட்டார் சைக்கிள்களின் சென்றவர்கள் மீதும் மூன்று பிரிவுன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்