Spread the love

தேர்தல் பரப்புரை அட்டவணை 

நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொள்ளும் பிரச்சார சுற்றுப்பயண விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி 7ந்தேதி முதல் 15ந்தேதி வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

அதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.2.2022 அன்று நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 7.2.2022 முதல் 15.2.2022 வரை கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

14770cookie-checkஎடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை அட்டவணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!