Spread the love

மாநாடு 20 February 2022

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் ஆதரவு வழங்குவதற்காக தேசிய சிறு தொழில் கழகத்துடன் (National Small Industries Corporation) எச்டிஎஃப்சி வங்கி ( HDFC Bank ) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்காகவே தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட கடன் திட்டங்களை எச்டிஎஃப்சி வங்கி அறிமுகப்படுத்துகிறது.மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களின் முயற்சிகளுக்கு எச்டிஎஃப்சி வங்கிக் கிளைகளே உதவி வழங்கும் என இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் தேசிய சிறு தொழில் கழகத்தின் இயக்குநர் கவுரங் திக்சித், எச்டிஎஃப்சி வங்கியின் விற்பனை துறை தலைவர் அகிலேஷ் குமார் ராய் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். சிறு, குறு, நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்த எல்லா ஆதரவும் வழங்கப்படும் என எச்டிஎஃப்சி வங்கி குழுமத்தலைவர் ராகுல் சுக்லா தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின்படி, தேசிய சிறு தொழில் கழகத்தால் வழங்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு எச்டிஎஃப்சி வங்கி ஒப்புதல் வழங்கும். வங்கியின் கொள்கைக்கு ஏற்பவும், தொழிலின் தகுதிக்கு ஏற்பவும் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.

நாடு முழுவதும் முக்கிய தொழில்துறை மையங்கள் இருக்கும் பகுதிகளில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் ஆதரவு வழங்கவும் எச்டிஎஃப்சி வங்கி முடிவு செய்துள்ளது

19200cookie-checkஅருமையான கடனுதவி வழங்க NSICயோடு ஒப்பந்தம் போட்டது எச்டிஎப்சி பேங்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!