மாநாடு 11 June 2022
தஞ்சாவூரில் சமீப காலமாக இருண்ட காலம் எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகிறது, அதன்படி ஒவ்வொரு சாலையும் உருப்படி இல்லாத அளவிற்கு சீர்குலைந்துள்ளது.
தஞ்சை மாநகராட்சி முழுவதும் பல இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது, பேருந்து நிலையங்கள் மூத்திர நாற்றத்தில் நாரி கிடக்கிறது, ஆனாலும் கூட தஞ்சாவூர் மாநகராட்சியில் அதிகாரிகளும் ஊழியர்களும் இருக்கிறார்கள்.
நம்புங்கள் தஞ்சாவூரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறார்கள். தஞ்சாவூருக்கு மேயரும் இருக்கிறார் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர்கள் உட்பட அனைவரும் இருக்கிறார்கள், இருந்தபோதும் தஞ்சாவூரில் இழிநிலை பல மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது, ஆனாலும் முதலமைச்சர் வரும்போது ஆளும் கட்சியினரும் அரசு அதிகாரிகளும் முண்டியடித்து நின்று கொண்டிருப்பதை செய்திகளின் வாயிலாக மட்டுமே காண முடிகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் நகரப்பகுதி இணைக்கும் பாலங்களை இடித்துவிட்டு புது பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்றது. ஆற்றில் தண்ணீரும் வந்துவிட்டது, ஏற்கனவே பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை பொதுமக்களும், முதியவர்களும், மகளிர்களும் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் கருந்தட்டாங்குடி வடவாறு ஆற்றின் குறுக்கே இருசக்கர வாகனங்கள் பயணிப்படுத்துவதற்காக பாதைகள் அமைக்கப்பட்டிருந்தது ,அந்த பாதை இன்று காலையில் எந்தவித முன்னறிவிப்புமின்றி
மணலைக் கொட்டி இருபுறமும் துண்டித்து வைத்திருக்கிறார்கள் ,அந்த பாதையை அடைத்து விட்டதற்கான என்ற அறிவிப்புப் பலகையையும் எங்குமே வைக்கவில்லை ,அந்த பாதைக்கு மாற்றுப்பாதை எது என்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப் படவில்லை , இதனால் மக்கள் வடவாறு பாலத்தை பயன்படுத்த முற்படுகின்றார்கள் ,
ஆனாலும் அந்தப் பாதையையும் பயன்படுத்த முடியவில்லை என்கிறார்கள், மகளிர்கள்,
ஆண்கள் இருசக்கர வாகனத்தை திருப்பிக்கொண்டு பழைய திருவையாறு சாலை வழியாக தஞ்சாவூர் நகர பகுதிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அங்கும் போக்குவரத்து நெரிசல்கள்
அதிகமாக ஏற்படுகிறது, இவ்வாறான குழப்பங்களுக்கு காரணமாக இருப்பது அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும், ஆட்சியாளர்களும் தான் என்கிறார்கள் பொதுமக்கள்,
பொது மக்களின் அடிப்படையான பிரச்சனைகளை தீர்த்து வைத்து விட்டு அமைச்சர்களுடன் சென்று கோவிலில் கூழ் காய்ச்சி ஊற்றுவதற்கு அதிகாரிகள் தலைமை தாங்க செல்லட்டும் என்று மன வேதனையை வெளிப்படுத்தி சென்றார் ஒரு முதியவர்.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.