Spread the love

மாநாடு 13 May 2022

உலகில் உள்ள பல உழைப்பாளர்களுக்கும் வாழ்வளித்து கொண்டிருக்கும் நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதன் அதிபராக இருந்தவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான். இவர் இன்று இறந்து விட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார். இவரது மரணம் அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே இவருடையே மரணத்திற்கு அந்நாட்டுமக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருடைய மறைவிற்கு அந்நாட்டில் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் மூலம் தெரிய வருகிறது. இவர் ஆட்சி புரிந்த காலங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நல்ல வளர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

34870cookie-checkஅதிபர் மரணம் மக்கள் அதிர்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!