மாநாடு 31 March 2024
யுத்த காலத்தில் கூட பசுக்களை கொல்லக்கூடாது என்று சொல்வார்கள் பசுவை வதைப்பது பாவம் என்றும் பசுமாட்டை தெய்வத்தின் அம்சமாக எண்ணி புது வீடு குடி புகும் போது வீடு கட்டியவர்கள் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு பசு மாட்டை அந்த வீட்டிற்குள் அழைத்து செல்வார்கள். தாயில்லா குழந்தைகளுக்கும் தாயாக இருந்து பல குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கும் பசுவை கும்பிட்டு பார்த்திருக்கிறோம் எங்காவது கொளுத்தி விட்டு பார்த்திருக்கிறீர்களா ?
வேண்டாதவர்கள் வைக்கோல் போருக்கு தீ வைத்ததில் சினையாக இருந்த பசுமாடு இறந்து விட்டதாகவும் இன்னும் இரண்டு பசு மாடுகளை காப்பாற்றினாலும் அதற்கும் தீக்காயங்கள் பட்டதில் துடித்துக் கொண்டு இருப்பதாகவும் செய்தியை நம்மிடம் கூறினார்கள். எங்கு நடந்தது , என்ன நடந்தது என்பதை நேரில் சென்று செய்தியை சேகரித்ததில் தெரியவந்தது யாதெனில்
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் அருகிலுள்ள ஊர் குருங்களுர் இந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவராக திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மாணிக்கவாசகம் என்பவர் இருந்திருக்கிறார்.
அவருக்கும் அவரின் உறவினருக்குமிடையே மனஸ்தாபங்கள் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக தொடர்ந்து அவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான மாணிக்கவாசகத்துக்கு ஏதாவது இடையூறு செய்து வந்ததாகவும் அது ஒரு கட்டத்தில் கைகலப்பில் முடிந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.
மேலும் 2014 ஆம் ஆண்டு மாணிக்கவாசகத்தின் வீட்டிற்கு பின்புறம் உள்ள வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்து இருக்கிறது ஏதோ எதார்த்தமாக எரிகிறது என்று நினைத்து தீயை அணைத்து இருக்கிறார்கள் அப்போது பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கிறார்கள் அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பு அன்று அதிகாலையில் வைக்கோல் போர் தீப்பற்றி எரிந்து இருக்கிறது மாட்டு கொட்டகையும் எரிந்த போதும் பெரும் சேதம் இலலாமல் தீ அணைக்கப்பட்டிருக்கிறது அப்போதே சந்தேகம் ஏற்பட்டு தஞ்சாவூர் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் காவல் நிலையத்தில் சமாதானம் பேசி இந்த பிரச்சனையை தீர்த்து வைத்ததாகவும் கூறுகிறார்கள்.
அதன் பிறகும் இந்தப் பிரச்சனை தீர்ந்ததாக இல்லை என்றும் 2022 ஆம் ஆண்டு 2 ஆடுகளை வெட்டி தலை துண்டித்து இவரின் பம்ப் செட்டில் கொண்டு போய் போட்டதாகவும், 2023 ஆம் ஆண்டு இவர் செல்லமாக வளர்த்த நாய்க்கு விஷம் வைத்து கொன்று விட்டார்கள் என்றும் மாணிக்கவாசகத்தின் குடும்பத்தினர்கள் கூறுகிறார்கள்.
அதன் பிறகு நேற்று நள்ளிரவு இவரின் வைக்கோல் போர் தீ பற்றி எறிந்ததில் இவரின் மாட்டு கொட்டகையும் அங்கு சினையாக இருந்த பசு மாடும் மற்றும் மூன்று மாடுகளும் தீயில் சிக்கி கத்தியதாகவும் எவ்வளவோ போராடியும் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்த போதிலும் சினையாக இருந்த பசுமாட்டை காப்பாற்ற முடியாமல் அந்த பசுமாடு தீயில் சிக்கி இறந்து விட்டதாகவும் மற்ற மாடுகள் தீக்காயங்களோடு காப்பாற்றப்பட்டதாகவும் அதிலும் இரண்டு மாடுகள் நிலை சரி இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
சினையாக இருந்து இறந்து போன பசு மாட்டையும் , காயம் பட்ட மாடுகளையும் காண முடிந்தது அதனை கிராம நிர்வாக அதிகாரியும் நேரில் வந்து பார்வையிட்டார். காவல் நிலையத்துக்கு புகார் அளித்ததையொட்டி காவலர்களும் நிகழ்வு இடத்திற்கு வந்திருந்தார்கள். அங்கு இறந்த கடந்த மாட்டையும் அணைக்க பட்ட பிறகும் புகைந்து கொண்டிருந்த வைக்கோல் போரையும் இடிந்து கிடந்த மாட்டு கொட்டகையும் பார்த்த மனசாட்சி உள்ளவர்கள் மனம் கலங்கி நிற்பார்கள் நின்றார்கள்.
எவ்வளவோ பகைவந்த போதும் பேசி தீர்க்க முடியும் என்கிற போது இந்த தீ பகையால் மூட்டப்பட்டிருப்பின் பகையை அணைக்க வேண்டும் என்பதே நமது செய்தியின் நோக்கம்.
காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகே தெரியவரும் இங்கு தீ பற்றியது விபத்தா ? சூழ்ச்சியா? என்று எதுவாக இருந்தாலும் இது போன்ற நிகழ்வு தொடரக்கூடாது… தொடரவும் விடக்கூடாது.