மாநாடு 4 December 2025
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்ட மாபெரும் உரிமையாக கொண்டுவரப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 . இந்த சட்டத்தின்படி ராணுவ ரகசியங்கள், தொழில்நுட்ப நுணுக்கங்கள், தனிமனிதனின் அந்தரங்கங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பொது ஊழியர்கள், அரசு பணியாளர்களிடம் மற்ற அனைத்தையும் கேட்டு பெற்று தெளிவடைந்து, நிர்வாகங்களில் கோல்மால் நடக்காமல் பார்த்து, தெரிந்து காப்பதற்கே இச்சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் வந்த புதிதில் அதன் நோக்கம் ஓரளவு நிறைவேறியது என்கிறார்கள் ஆர் டி ஐ ஆர்வலர்கள் ஆனால் சமீப காலமாக.. பல ஆண்டுகளாக ஒட்டி போடுகிற மனுக்களுக்கு ஆகும் செலவும், அதற்காக பயன்படுத்தும் நேரமும் வெட்டி என்பது போல தான் இருக்கிறது ஆர் டி ஐ ஆணையத்தின் நடைமுறை என்கிறார்கள் அதனைப் பற்றி முழுமையாக தெரிந்தவர்கள். குற்றம் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்த சாமானியனாலும் முடியும், தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும், தண்டம் கட்ட வைக்க முடியும் அதன் மூலம் அரசு நிர்வாகங்கள் சுத்தமாகும் என்று நினைப்பவர்கள் நித்தம் நித்தம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கு பல்வேறு வழக்குகள் சான்றாக இருக்கிறது. சமீப காலத்திலெல்லாம் ஆர்டிஐ சட்டத்தை அலுவலர்கள் மதிப்பதே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை . அதேபோல

மாநில தகவல் ஆணையத்தில் உள்ள ஆணையர்களும் அக்கறை இல்லாமல் வழக்குகளை அலட்சியமாக கையாளுகிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது. உண்மை நிலை இவ்வாறு இருக்க rti மூலம் தகவல் பெற விரும்பி சமூக ஆர்வலர் பிடிஓவுக்கு மனு செய்து இருக்கிறார் அதை கொஞ்சம் கூட மதிக்காமல், பதில் தராமல் இருந்திருக்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். அவ்வழக்கு விசாரணை தற்போது வந்தபோது மாநில தகவல் ஆணையர் பி டி ஓ வால் தாங்கிக் கொள்ள முடியாத கடுமையான தண்டத் தொகையை கட்டச் சொல்லி இருக்கிறார் இதேபோல தகவல் ஆணையர்களும், இதேபோல அதிகாரிகளும் செயல்பட்டால் பொருளாதார இழப்பு ஏற்பட்டு கூடிய விரைவில் இலங்கையில் நடந்தது இங்கும் நடக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். என்ன நடந்தது, எங்கு நடந்தது என்பதை பார்ப்போம்;
மனுதாரர் கோரிய தகவலை வழங்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு நஷ்டஈடாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என பி.டி.ஓ.என்று மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் 2023 ஏப்ரல் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அனுப்பியுள்ளார்.
அம்மனுவில் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2021 ஜனவரி முதல் 2023 ஏப்ரல் வரை பணியாற்றிய அலுவலக ஊழியர்கள் எண்ணிக்கை, அவர்கள் வகித்த பதவி, மரணம் அடைந்த ஊழியர்கள், அதற்கான பணப்பலன் பெற்ற வாரிசுதாரர்கள் உள்ளிட்ட தகவல்களை கேட்டிருக்கிறார். அதிகாரிகள் தகவல் தராததால் மாநில தகவல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.
இதுகுறித்த முதல் விசாரணைக்கு மனுதாரர் ஆஜரான நிலையில் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் ஆஜராகவில்லை என்பதால் , இரண்டாம் விசாரணைக்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்த இரண்டாவது விசாரணைக்கும், தளி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலர் ஆஜராகவில்லை என்றவுடன் வழக்கை விசாரித்த மாநில தகவல் ஆணையர்
தாமரைக்கண்ணன் பிறப்பித்த அதிரடி உத்தரவு:
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், மனுதாரர் கோரிய தகவல்களை, 10 நாட்களுக்குள் முறையாக வழங்க வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல் வழங்க தவறிய, பொது தகவல் அலுவலரை கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிக்கு ஏன் பரிந்துரைக்கக் கூடாது என்பதற்கான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை, வரும் 23ம் தேதிக்குள் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு நஷ்ட ஈடாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் மாநிலத் தகவல் ஆணையர்.
இது போன்ற தகவல் ஆணைய வழக்குகளை எதிர்நோக்கி வரும் சமூக ஆர்வலர்கள் மருதமலை படத்தில் வரும் வடிவேல் நகைச்சுவை தான் நினைவில் வருகிறது என்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் இது போன்ற எவ்வித செயல்பாடுகளும் இல்லாத, எதை ஒன்றையும் மாற்றவே முடியாத நிலையில் இயங்கும் இந்தத் துறைக்கு செலவிடப்படும் பணம், இதில் பணி புரியும் அதிகாரிகளுக்கு செலவிடும் தொகைகள் சம்பளம் உட்பட தண்டம் தானே என கேள்வி வைக்கிறார்கள் அதுவும் ஒரு வகையில் சரிதான் என்று தான் தோணுகிறது.
வருங்காலங்களிலாவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் சரியாக முறையாக செயல்பட வேண்டும், செயல்படுத்த வேண்டும், இல்லையேல் இழுத்து மூட வேண்டும் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்த …அடுத்த செய்திகளும் சிறப்பாக செய்வோம்.
