Spread the love

மாநாடு 26 December 2025

இந்தியாவில் வணிகம் செய்து வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமையாக்கிய காலகட்டத்தில் கூட களவு, கொள்ளை போகாத நிலை இருந்தது, ஆனால் இக்கால கட்டத்தில் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுரண்டல்கள் நடைபெறுகிறது.

அரசு அலுவலகங்களில் அரசு பணியில் இருக்கும் அலுவலர்கள் சிலரைத் தவிர பலர் ஆண்டாண்டு காலம் அரசாள வந்த அரசர்கள் நாம் என்பது போல நினைத்துக் கொண்டு பொதுமக்களை அலட்சியப்படுத்துவதும், அலைய விடுவதும், அவர்களின் கோரிக்கை மனுக்களை, புகார் மனுக்களை புறந்தள்ளிவிட்டு யாராவது விவரம் தெரிந்தவர்கள் மேலும் சட்ட நுணுக்கங்களோடு அழுத்தம் கொடுத்து கேட்டால் அவர்களிடம் வேலை பளு சார், ரொம்ப கஷ்டப்படுகிறோம் சார் , எப்ப பாத்தாலும் மீட்டிங் சார் , அது இது என்று சாக்கு போக்கு சொல்லி கதை அளந்து விடுவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டி வரும் பல அலுவலர்களும் பல அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதை பெரும்பாலானோர் பார்த்திருப்போம், காதில் கேட்டிருப்போம்.

பொதுத்துறை அரசு நிறுவனங்கள், பொது அலுவலர்கள், வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும், செலவிடப்படும் நிதிகள் முறையாக செலவிடப்பட வேண்டும், வருமானத்திற்கு தகுந்த சொத்துக்களை மட்டுமே அரசு அலுவலர்கள் சொந்தம் ஆக்க வேண்டும், மொத்தத்தில் லஞ்சம், ஊழல்களை ஒழிக்க வேண்டும் , சுதந்திரப் இந்தியாவில் வெள்ளையர்கள் இல்லை என்பது போல  கொள்ளையர்களும் இருக்கக் கூடாது.

அரசு அலுவலகங்கள் அப்படி இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு அரசு நிர்வாகங்களும் வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும், அரசு ஊழியர்கள் சொத்துக்கள் மேற்கொண்டு வெளிப்படை தன்மையோடு ஈட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக , பலரின் அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 .

இச்சட்டத்தின் நோக்கமே இந்தியாவின் ஒத்த குடிமகன் நினைத்தால் கூட உடனடியாக யாரின் துணையும், தயவும் இல்லாமல் வெறும் 10 ரூபாய் செலுத்தி , எளிய முறையில் புரியும்படி கையால் எழுதிக் கூட தகவல்களை கேட்டு பெற்று முறைகேடுகள், ஊழல்கள் , லஞ்சங்களை ஒழிக்க துணை நிற்க வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட RTI 2005 சட்டத்தை சட்டை செய்யாமல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டால் தராமல் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசு அலுவலர்கள் ஆனால் அவர்களுக்கு தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாதது போல உணராமல் இருக்கிறார்களா என்று ?

ஒரு சிலரைத் தவிர பலர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட ஓய்வில்லாமல் நீதிமன்றத்திற்கு அலைவதும் ,நிம்மதி இழப்பதும்..

இந்த நேரத்தில்.. கடமையில் இருக்கும் போது கை நிறைய காசு பார்க்க வேண்டும் என்று கணக்காக கல்லாகட்ட சொல்லிக் கொடுத்தவர்கள் மாட்டிக் கொண்டு தவிக்கும் போதும் , அலைந்து திரியும் போதும் அம்போ என்று விட்டு விடுவதை பலரும் பல நேரங்களில் பார்த்து வருகிறோம் உண்மை நிலை அப்படி இருக்க , இன்னமும் பல அரசு அலுவலகங்களில் பல அதிகாரிகள் மக்களின் மனுக்களுக்கு மதிப்பளிக்காமல் மழுப்பி வரும் போக்கே இருக்கிறது அதிலும் ,

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் மனு போட்டால் தர்ம சத்திரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்கும் சாமியார்கள் போல மனுமீதான எந்த வேலையும் பார்க்காமல்,  எது கேட்டாலும் அதற்கு ஒரே பார்மட்டில்  (பதில்) தகவல் தயார் செய்து வைத்துக் கொண்டு தருவதை பலரும் பார்த்து வருகிறோம் மாநாடு செய்தி ஊடக குழுமம் அதுபோன்று நடப்பவர்களை அவ்வப்போது மக்களின் முன் அடையாளப்படுத்தி வருகிறோம் அதன் தொடர்ச்சியாக இது..

தஞ்சாவூரை சேர்ந்தவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு மனு செய்திருக்கிறார் எப்போதும் போல இப்போதும் இருந்திருக்கிறார்கள் தஞ்சாவூர் மாநகராட்சி கண்காணிப்பாளர் யோகாம்பாள் உள்ளிட்ட அலுவலர்கள் அதன் விவரம் பின்வருமாறு ;

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனுதாரருக்கு உரிய நேரத்தில் தகவல் வழங்காத காரணத்தால் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சோ்ந்த ரெ.சொா்ணசாரதி என்பவர் தஞ்சாவூா் மாநகராட்சி மருதையாப்பிள்ளைத் தெருவில் குடிநீர் குழாய் மீது வீடுகட்டி ஆக்கிரமித்துள்ள தகவல் தொடர்பாக மாநகராட்சியிடம் மனு அளித்துள்ளார்
எப்போதும் போல இப்போதும் கிடப்பில் கிடந்து இருக்கிறது, இந்நிலையில் அவர் அந்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான கோப்பின் நகல்களை தனக்கு தகவல்களாக வழங்க கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு தகவல்கள் வழங்கப்படவில்லை என்பதால், 2 முறை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனு மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தவர், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.கண்ணன் அடுத்த ஆண்டு அதாவது 5-1-2026 ஆம் தேதி நேரில் ஆஜராகி மனுதாரர் கோரிய தகவல்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதேபோல் தகவல்களை உரிய நேரத்தில் வழங்காத காரணத்தால் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார் . மேலும் அந்த இழப்பீடு தொகையை மனுதாரர் பெற்றுக்கொண்டதற்கான ரசீது நகலை ஆணையத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

“யோகாம்பாள் கண்காணிப்பாளர்”

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத தஞ்சாவூர் மாநகராட்சி கண்காணிப்பாளர் எஸ்.யோகாம்பாளுக்கு ஏன் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை வரும் ஜன.5-ஆம் தேதி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஆணையர் வி.பி.ஆா். இளம்பரிதி உத்தரவிட்டுள்ளார்.

அபராத தொகை அவ்வளவு பேரிடியை அவர்களுக்கு ஏற்படுத்தாது என்றாலும் இச்சம்பவம் இனி அப்படி அங்கு நடக்காமல் இருக்க ஒரு முன்னுதாரணமாக அமைந்தால் அனைவருக்குமே நல்லது..

88550cookie-checkதஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25000 அபராதம், 2026 ஜனவரி 5ம் தேதி, ஆரம்பமே அமர்க்களம்…

Leave a Reply

error: Content is protected !!