Spread the love

மாநாடு 9 January 2026

தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தொடர்ந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது,

அதன்படி இன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் பனகல் கட்டிடம் முன்பாக பெருந்திரளான மகளிர்கள் கூடி முழக்கங்கள் எழுப்பி,

தரையில் அமர்ந்து போராடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அரசின் கவனத்தை ஈர்க்குமா?

முதல்வரிடம் முறையிட வாய்ப்பளிப்பாரா?

இப்பிரச்சனைகளை முடித்து வைப்பாரா? போராடியவர்கள் யார்? அவர்களின் கோரிக்கைகள் என்ன?

அனைத்து தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் சங்கத்தினர் பெருந்திரளாக திரண்டு ஒன்று கூடி

தஞ்சாவூரில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தார்கள் அவர்களின் கோரிக்கைகள் பின்வருமாறு :


1.   10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் எங்களை பணி நிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

2.   எங்களுக்கு வழங்கும் மாத ஊதியத்தை வட்டார அளவிலான கூட்டமைப்பிலிருந்து / நகர்ப்புற வாழ்வாதார மையங்களில் இருந்து விடுவிப்பதை கைவிட்டு,

மாவட்ட இயக்க மேலாண்மை அலகிலிருந்து நேரடியாக ஊதியம் விடுவிக்க வேண்டும்.

3.   பணித்திறன் மதிப்பீடு என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட்டு, வருடம் 15% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.

4.   அனைத்து துறைகளின் மூலம் வழங்கப்படும் கணக்கெடுப்பு பணிகளில், எங்களை ஈடுபடுத்தி பணிச்சுமையை வழங்க கூடாது.

5.   தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு தனித்துறையை உருவாக்கி ஆணையிட வேண்டும்.

6.   மகளிர் பணியாளர்களுக்கு 12 மாத கால மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.

7.   உதவி திட்ட அலுவலர்களுக்கு ரூ 60000./ வட்டார இயக்க மேலாளர்களுக்கு ரூ 35000/ வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரூ 30000/ சமுதாய அமைப்பாளர்களுக்கு ரூ 30000/ குறைந்த பட்சம் மாதம் ஊதியம் வழங்க வேண்டும்

8.   ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் புத்தகப் பராமரிப்பாளர்களுக்கு திட்டத்தின் மூலம் குறைந்த பட்சம் மாதம் ரூ 7500/– ஊதியம் வழங்க வேண்டும்.

9.   சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர்களுக்கு திட்டத்தின் மூலம் குறைந்த பட்சம் மாதம் ரூ 7500/- ஊதியம் வழங்க வேண்டும்.

10.  CRP -களுக்கு திட்டத்தின் மூலம் குறைந்த பட்சம் மாதம் ரூ 7500/- ஊதியம் வழங்க வேண்டும்.

11.   நகர்ப்புற பகுதிகளில் சமுதாய வள பயிற்றினர்களை உருவாக்கி அவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக ரூ 7500/- வழங்க வேண்டும்.

Sponsored Advertisement

12.   சமுதாய அமைப்பாளர்களுக்கு அனைத்து மண்டலங்களிலும் அலுவலகம் அமைக்க வேண்டும்.

13.   மாநில மற்றும் மாவட்ட அலுவலகங்களில் காணொளி காட்சி என்ற பெயரில் நேரம் காலமில்லாமல் ஆய்வு கூட்டம் நடத்துவது வரைமுறைப்படுத்த வேண்டும்.

14.   அனைத்து நிலை பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும்.

15.   ஏற்கனவே பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ 10,00,000/- நிதி உதவி வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

88890cookie-checkதஞ்சையை திணறடித்த போராட்டம், திரும்பிப் பார்க்குமா தமிழக அரசு

Leave a Reply

error: Content is protected !!