மாநாடு 02 October 2025
சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 57 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 2556 மதுபாட்டில்கள் பறிமுதல்
இன்று 02.10.2025 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்டங்களிலும் பகுதி நேர அடிப்படையில் காவலர்களை நியமித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி நகர உட்கோட்டத்தில் துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலான காவலர்கள் கொண்ட குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் பலோபந்தாவனம், CRC BUS Dept அருகில் மதுபாட்டில்களை விற்பனை செய்த நபர்களான கீழவாசலைச் சேர்ந்த ரமேஷ்(வயது-29) மற்றும் பலோபந்தாவனத்தைச் சேர்ந்த சத்தியராஜ்(வயது-40), கீழவாசலைச் சேர்ந்த ஜெய்சங்கர்(வயது-52),திருவையாரைச் சேர்ந்த குமார்(வயது-48) மற்றும் NK ரோட்டைச் சேர்ந்த காளிசரண் (வயது-44) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
வல்லம் உட்கோட்டப் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி வல்லம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலான காவலர்கள் கொண்ட குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர்களான திருவையாரைச் சேர்ந்த குமரேசன்(வயது-33), ஆலக்குடியைச் சேர்ந்த மணிகண்டன்(வயது-33), பிள்ளையார்பட்டியைச் ‘சேர்ந்த அலெக்ஸாண்டர்(வயது-37), மதன்(வயது-30), குருங்குளத்தைச் சேர்ந்த ஆனந்த்(வயது-31) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 280 மதுபாட்டில்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஒரத்தநாடு உட்கோட்டத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த குற்றவாளிகளான நெய்வாசலைச் சேர்ந்த மகாதேவன்(வயது-55), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அழகர்சாமி(வயது-56), திருவாருர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரபாபு(வயது-46) மற்றும் ஒரத்தநாட்டைச் சேர்ந்த சேகர்(வயது53), அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்த சந்திரன்(வயது-55) மற்றும் நெய்வேலி தென்பாதியைச் சேர்ந்த சின்ராஜ்(வயது-53) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 144 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
பட்டுக்கோட்டை உட்கோட்டம் பேராவூரணி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் மதுபான கடை எண் :7874 அருகில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த குற்றவாளியான விவேக்(எ) வீரகுமார்(வயது-26), என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 730 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.
திருவையாறு உட்கோட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட செங்கிப்பட்டி To கந்தவர்வகோட்டை ரோட்டில் உள்ள மதுபானக் கடையில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் உதவி காவல் ஆய்வாளர் அருள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக மதுபான கடை எண்-8038 யின் பின்புறம் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரான திருவையாரைச் சேர்ந்த ரஞ்சித்குமார்(வயது-24) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த 384 மதுபாட்டில்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டார்.
கண்காணிப்பாளர் துணைக்காவல் பாபநாசம் உட்கோட்டத்தில் மேற்பார்வையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த குற்றவாளிகளான பாபநாசத்தைச் சேர்ந்த தேவேந்திரன்(வயது-22), புருஷோத்தமன்(வயது-43), ராஜகிரியைச் சேர்ந்த தாமு(வயது-72),பாபநாசத்தைச் சேர்ந்த ஜெய் செய்யப்பட்டு சங்கர்(வயது-50), சிவசாமி(வயது-66) மற்றும் காமராஜ்(வயது-40) ஆகியோர் கைது அவர்களிடமிருந்த 144 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கும்பகோணம் உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த குற்றவாளியான வலங்கைமானைச் சேர்ந்த மகேந்திரன்(வயது-35) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். 38
திருவிடைமதூர் உட்கோட்டப் பகுதியில் துணைக்காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரால் தீவிர சோதனை மேற்கொண்டதில் குற்றவாளிகளான சூரிய நாராயன தெருவைச் சேர்ந்த பரணி(வயது-22), தலையாரி தெருவைச் சேர்ந்த பாலாஜி(வயது-35), கல்யாணபுரத்தைச் சேர்ந்த செல்வமணி(வயது-43) மற்றும் ஆவணியாபுரத்தைச் சேர்ந்த ஹாஜி முகமது(வயது-54), புளியம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது-41) மற்றும் திருபுவனத்தைச் சேர்ந்த சித்தான்(வயது-44) ஆகியோரை கைது 96 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து பந்தநல்லூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர்களான மேலக்காட்டுரைச் சேர்ந்த முருகதாஸ்(வயது-55), ஆற்றங்கரைத் தெருவைச் சேர்ந்த அய்யப்பன்(வயது-51) மற்றும் தோப்பு தெருவைச் சேர்ந்த ரவி(53) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். செய்து
இவ்வழக்கில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கும்பகோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான காவலர்கள் அடங்கிய குழுவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். கூடவே மக்களின் சார்பாக மாநாடு செய்தி குழுமமும் போற்றி பாராட்டுகிறது.