மாநாடு 6 June 2022
மீனவர் காத்தவராயன் என்பவர் தனது மனைவி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்காக எங்களை 3 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்.
என்னடா இது திராவிட மாடல் ஆட்சியிலும் கூடவா நடவடிக்கை இல்லை என்ன நடந்தது பார்க்கலாம் : மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி குட்டியாண்டியூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மீனவர் காத்தவராயன். இவர் நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு 1லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கவேண்டும் என்று காத்தவராயனை குட்டியாண்டியூர் கிராம பஞ்சாயத்தார்கள் அழைத்து பேசி இருக்கிறார்கள்.
அதற்கு நாகை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் தான் எனக்கு பணம் தர வேண்டியது இருக்கிறது என்று பஞ்சாயத்தார்களிடம் காத்தவராயன் கூறியிருக்கிறார் அதற்கு பஞ்சாயத்தார்கள் சொல்வதை நீ கேட்கவேண்டும் மீறினால் அபராதம் விதிப்பதோடு உங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்போம் என்றிருக்கிறார்கள். அதற்கு காத்தவராயன் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டால் ஊரை விட்டு நீங்கள் ஒதுக்கி வைப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பி பஞ்சாயத்தார்களின் உத்தரவுக்கு கட்டுப்பட முடியாது என்று சொல்லியிருக்கிறார். உடனே காத்தவராயன் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாக தீர்ப்பு கூறியிருக்கிறார்கள் பஞ்சாயத்தார்கள்.
இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இவர்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் இவருக்கு பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கிறார்கள் அவர்கள் கூட யாரும் பேசுவது கிடையாதாம் அதனால் அவர்களும் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாக கூறியிருக்கிறார்.
இச்சம்பவம் குறித்து பொறையார் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் பஞ்சாயத்து அவர்கள் மீது எடுக்கவில்லை என்றும் கடந்த 3 ஆண்டுகளாக தாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் இவர்களைப் போலவே இவர் கிராமத்தில் பல குடும்பங்கள் ஊர் பஞ்சாயத்தார் களால் ஒதுக்கி வைக்கப்பட்டு பல்வகையான துன்பங்களுக்கு ஆட்படுத்த பட்டிருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கும் இந்த நிலையை நீக்கி எங்களின் வாழ்வாதாரத்தையும் குடும்ப நிம்மதியையும் காத்து தரவேண்டும் என்றும் இது தவறும்பட்சத்தில் நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் மீனவ கிராமங்களில் அதிகமாக பஞ்சாயத்தார்கள் என்கிற பெயரில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நமது மாநாடு இதழுக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது, பல ஊர்களில் உள்ளாட்சித் தேர்தல்களில் கூட நடத்த விட மாட்டார்களாம் இவர்களே ஊர் பஞ்சாயத்துக்கு ஒரு தொகையை பேசி வாங்கிக்கொண்டு தேர்தலில் தலைவர் இவர்தான் என்று அறிவித்து விடுவார்களாம் அதன்படிதான் ஊரார்களும் நடக்க வேண்டுமாம் அதனையும் அவ்வப்போது ஆதாரத்தோடு வெளியிட இருக்கிறோம்.