மாநாடு 12 July 2022
அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்று தனது ஓய்வூதியத்தின் மூலம் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற பல்லாயிரக்கணக்கான ஓய்வூதியதாரர்களையும் மிகவும் மன உளைச்சலுக்கு உண்டாக்குவதாகவும், நூற்றில் ஒருவருக்கு மட்டுமே பிடிக்கப்படும் காப்பீட்டின் மூலம் பலன் கிடைப்பதாகவும் ஆனால் அதற்காக மாதா மாதம் ஓய்வூதியத்தில் இருந்து கட்டாயமாக பணம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், இந்த குறைகளை நிவர்த்தி செய்யச் சொல்லி சென்ற அதிமுக ஆட்சியிலும் நாங்கள் முறையிட்டிருக்கிறோம் ஆனால் எங்களுக்கு இதுவரையில் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை,
இந்நிலையில் இது சம்பந்தமாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கங்காதரன் நேற்று நிதி அமைச்சருக்கு தெரியப்படுத்தும் விதமாக கோரிக்கை மனுவை அனுப்பி இருக்கிறார் இந்த முறையாவது எங்களுக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறோம் என்கிறார் அரசு ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் மேலும் அவர் கூறியதாவது: புதிய அரசு ஆணைப்படி ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கான“New Health Insurance Scheme” ல் பயன்களை காட்டிலும் இழப்புகள் அதிக அளவில் இருப்பதாகவே ஓய்வூதிய தாரர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே சில மருத்துவ செலவுகளுக்கான பணப்பயன் 4 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் ரூ.7.5 லட்சப் பணப்பலன் ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது உண்மையில் வரவேற்கப்பட வேண்டியது. ஆனால் செயல்பாட்டில் முழு பயன் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. அனேக நடைமுறை சிக்கல்களாலும், தேவையில்லாத குறுக்கு விசாரணைகளாலும்,காப்பீட்டு கழகத்தின் எதிர் மறையான போக்குகள் காரணமாகவும் பயணாளிகள் உண்மையில் செலவு செய்த மருத்துவ செலவு பணம் கிடைப்பதே இல்லை. அதிகப்படியானவர்களின் விண்ணப்பங்கள் கண்மூடித்தனமாக நிராகரிக்கப்பட்டு விடுகிறது.மூன்றடுக்கு குறைதீர் மன்றங்கள் இவர்களுக்கு இருந்தும் இதில் இன்று வரை தீர்வு காணப்படாதது வருத்தத்திற்குரியது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அனைவரிடமிருந்தும் கட்டாயமாக பிடிக்கப்படும் (Health Insurance)உடல் நலக்காப்பீட்டு நிதி United India Insurance company க்கு முழுவதும் போய்சேருகிறது.ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் claim பண்ணும் போது ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்கப்பட்டு விடுகிறது. வயதானகாலத்தில் உடல்நிலை பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. இப்படிப்பட்ட ஆதரவற்ற நிலையில் தன் பணம் தனக்கு கிடைக்காத நிலையில் மனவுளைச்சலுக்கும் உள்ளாகும் முதியோரை எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படி பட்ட மக்களின் சேமிப்புத் தொகையை யுனைடெட் இந்தியா இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனம் , M.D .India என்ற தனியார் நிறுவனத்தின் முறையற்ற மேற்பார்வையில் எந்த சரியான தணிக்கையும் , விசாரணையும் இல்லாமல் உண்மையான அனேகரது விண்ணப்பங்களை நிராகரித்து பணத்தை கொள்ளையடித்து வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இந்நிலையில் மாதாமாதம் ஓய்வூதிய தாரர்களிடமிருந்து இது நாள்வரை பிடித்தம் செய்து வரும் ரூ.350/= இனிவரும் மாதம் முதல் ரூ.497/=ஆக மாற்றப்பட்டு உள்ளது என்பது தான் வேதனை அளிக்கிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படாத நிலையில் இந்த வசூல் எந்த விதத்திலும் நியாயமற்றது என்கிறார் அரச்சீற்றத்தோடு.