மாநாடு 12 May 2022
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார் சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் நகர்ப்புற பகுதிகளில் இருக்கின்ற கோயில்களை புனரமைக்க 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார் தற்போது இங்குள்ள சித்தி புத்தி விநாயகர் கோயிலிலும், பெரியபாளையத்து அம்மன் கோயிலிலும் திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.மேலும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வான பட்டினப்பிரவேசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை பயத்தின் அடிப்படையில் நீக்கப்படவில்லை என்றார் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என்றார்.
வரும் காலங்களில் பட்டினப் பிரவேசம் போன்ற நிகழ்வுகள் அப்போதைய சுழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றார். தமிழக அரசு ஆத்திகர், நாத்திகர் என வேறுபாடு பார்க்காமல் அனைவருக்குமான அரசாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார், திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் குறித்த விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்றவர்களை அங்குள்ளவர்கள் தடுத்து அனுமதி மறுத்துள்ளனர். அங்கு அரசு அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளதை, பதிவு செய்துள்ளோம் என்றும், சட்டபூர்வமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்
