மாநாடு 14 May 2022
ஜூன் 3ம் தேதி மறைந்த திமுகவின் தலைவர் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடும் என்று சட்டமன்றத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதனையொட்டி தற்போது சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு புதிதாக முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த கண்காட்சியை ஜூன் 3 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் அதன் பிறகு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது 3ஆம் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி 5ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது .இந்த கண்காட்சிக்கு புனே, பெங்களூர், ஊட்டி ,ஓசூர் ,திண்டுக்கல் என பல பகுதிகளில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட வகை மலர்களால் கருணாநிதியின் உருவத்தை அலங்கரிக்க உள்ளதாகவும் இதில் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனையையும் விளக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் வருகிற 28ஆம் தேதி கருணாநிதியின் சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்,
மேலும் ஜூன் 3ஆம் தேதி மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் 1.56 கோடி ரூபாய் செலவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனையும் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக அரசிடம் அத்தியவசிய செலவுகளுக்கு பொருளாதாரம் தட்டுப்பாடு உள்ள நிலையால் 150 விழுக்காடு வரி உயர்வு பல பொருட்களின் விலை உயர்வு என விலையை உயர்த்தக் கூடிய சூழலில் நிதி நெருக்கடியில் அரசு இருக்கிறது என பல அமைச்சர்களும் பல நேரங்களில் கூறிவருகிறார்கள் சமீபத்தில் பேருந்து கட்டணங்கள் கூட மக்களை பாதிக்காத வகையில் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது இதுபோன்ற காலகட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடத்திற்கு பொதுமக்களின் பணமான அரசின் பணத்தை எடுத்து 39 கோடி ரூபாயில் நடக்கும் பணிகளையும் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு சார்பில் 1.56 கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு திறப்பதற்கு தயாராக இருக்கும் மு கருணாநிதியின் சிலையும்
தற்போதுள்ள நிதி நெருக்கடியில் தேவையற்றது என்று பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
மக்களுக்காக உழைக்க வந்தவர்களுக்கு மக்களை வதைத்து மக்கள் பணத்தை எடுத்து கோடிக்கணக்கில் இது தேவையா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும் இந்த மாதிரியான போக்கை நிறுத்த வேண்டும்.