மாநாடு 21 May 2022
மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் பல ஆண்டுகளாக நடைபெற்று கொண்டிருந்தது இந்த ஆண்டு அந்த அறிவிப்பு வெளியான உடனே மனிதனை மனிதன் தூக்கும் நிகழ்வு அனுமதிக்கப்படக்கூடாது என திராவிடர் கழகத்தினர் புகார் தெரிவித்தனர்.
இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று கூறி பட்டின பிரவேச நிகழ்வுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்திருந்தார்.
இதனிடையே ஆதீனங்கள் பட்டிணப்பிரவேசம் என்பது யாரையும் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதில்லை இந்நிகழ்வு ஆண்டாண்டு காலமாக அதாவது 16ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட தருமபுரம் ஆதீன விழாவில் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி செல்வது தொடர்ந்து நடந்து வருகிறது என்று அவர்கள் தரப்பில் உள்ள வாதத்தை முன் வைத்தார்கள்.
இருப்பினும் இந்த நவீன காலத்திலும் அது தொடர வேண்டுமா என்ற கேள்வியையும் பலரும் முன் வைத்தார்கள். அதன் பிறகு சைவ மட ஆதினங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பட்டின பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி தரும்படி கோரிக்கை வைத்தார்கள். அவர்களிடம் இவை அனைத்தும் சரி செய்து தரப்படும் என்ற வாக்குறுதியை ஸ்டாலின் கொடுத்ததாக மே மாதம் 8ஆம் தேதி மயிலாடுதுறையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆதீனங்கள் கூட்டாக தெரிவித்தார்கள்.
அன்றே பட்டின பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கோட்டாட்சியர் நீக்கியதாக செய்திகள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை, ஆதீன பக்தர்கள் பல்லக்கில் தூக்கி வீதியுலா செல்லும் பட்டினப் பிரவேசம் நிகழ்வு எப்போதும்போல இன்றும் நடைபெற்றது.
Thank you, your article surprised me, there is such an excellent point of view. Thank you for sharing, I learned a lot.