Spread the love

மாநாடு 26 May 2022

பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இன்று மாலை வருகைதந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர். ஐஎன்எஸ் அடையாற்றில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்

தொண்டர்களை உற்சாகப்படுத்தும்  விதமாக பிரதமர் கையசைத்தார் அதன் பிறகு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மொத்தம் ரூ31,400 கோடி மதிப்பீட்டிலான 11 திட்டங்களை இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். அவர் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர் பயணம் செய்து வரும் பாதைகளில் போக்குவரத்துகள் மாற்றப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் ஏறக்குறைய 5 மணி நேரம் அங்கு இருந்த கடைகளை பிரதமரின் பாதுகாப்பை கருதி அடைக்கச் சொல்லியிருந்தார்கள்.

முதல்வர் மு.க ஸ்டாலின் விழாவில் பேசும்போது திராவிட மாடல் என்றால் என்ன என்று விளக்கும் விதமாக இவ்வாறு பேசினார் .தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் சார்ந்தது அல்ல என்றும் சமூகநீதி பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியது என்றும் அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியை உள்ளடக்கியதே திராவிட மாடல் வளர்ச்சி என்று பேசியதை அவரது தொண்டர்கள் பெருமிதத்தோடு கூறிவருகிறார்கள்.

இதெல்லாம் பிரதமருக்கு புரிகிறதோ இல்லையோ தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்களைப் பற்றி நன்கு புரிகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

36360cookie-checkமோடியை வைத்துக்கொண்டு பேசிய ஸ்டாலின்
2 thoughts on “மோடியை வைத்துக்கொண்டு பேசிய ஸ்டாலின்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!