மாநாடு 28 May 2022
கடந்த ஏப்ரல் 26ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்படும் என்று பேசினார்.
அதன்படி 1.17 கோடி ரூபாய் செலவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ளதுபோலவே உருவாக்கப்பட்டுள்ளது.
அதனையொடடி திமுகவின் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். மேலும் அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்.
அதைத்தொடர்ந்து விழா நிகழ்ச்சிகள் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் நிதி நிலை இன்னுமும் சகஜ நிலைக்கு வரவில்லை என்று பிரதமர் மோடியின் முன்னாள் பேசிய முதல்வர், அதன் காரணமாக ஜிஎஸ்டி திருப்பி செலுத்தும் காலக்கெடுவை இன்னும் இரண்டு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், நாட்டின் நிதி நிலை இவ்வாறு இருக்க ஒரு தலைவன் மக்கள் மனதில் நிலை பெற்று விட்டால், சிலை வைக்க தேவையில்லை அப்படி தான் தமிழ்நாட்டில் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் மேற்கொண்டு பலருக்கும் இன்றுவரை சிலை இல்லை, நாட்டில் சூழ்நிலை இப்படி இருக்க மணிமண்டபம் கட்டுவதற்கும் சிலை அமைப்பதற்கு மக்கள் பணத்தை செலவிடுவது இந்நிலையில் உகந்ததல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுமட்டுமல்லாமல் தேர்தலுக்கு முன்புவரை பாரதிய ஜனதா உள்ளே புகுந்துவிடும் அதை தடுப்பதற்கான ஒரே வழி திமுகவை ஆட்சியில் அமர வைப்பது தான் என்று பேசி வந்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் தானே வலிந்து வந்து பாஜகவுக்கு வரவேற்பு கொடுத்து மகிழ்கிறது திமுகவின் உண்மை தொண்டர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள்.