Spread the love

மாநாடு 11 May 2022

தஞ்சாவூர் அருகே உள்ள கருந்தட்டாங்குடி சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர் மகேஸ்வரன். இவர் நேற்று இரவு கரந்தட்டாங்குடியில் உள்ள தனது பண்ணையில் இருந்திருக்கிறார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த மூன்று பேர் அவரை நெருங்கி சராமரியாக வெட்டி உள்ளார்கள் சத்தம் போட்டபடியே ரத்த வெள்ளத்தில் சரிந்து இருக்கிறார் ஆடிட்டர் மகேஸ்வரன். அவர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நிகழ்வு இடத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆடிட்டர் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்து இருக்கிறார். கொலையாளிகள் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தையடுத்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு தெரியப் படுத்தி இருக்கிறார்கள் .

காவலர்கள் விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்கள். விசாரணையின் முடிவில் இவரை யார் கொலை செய்தார்கள் ?ஏன் கொலை செய்தார்கள் என்பது தெரியவரும். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி கழிவறையை ஏலத்திற்கு ஆடிட்டர் மகேஸ்வரன் எடுத்ததாகவும் அதன் காரணமாக முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது விசாரணையின் முடிவில் முழு விவரமும் வெளி வரும். சமீபகாலமாக தமிழ்நாடு முழுவதும் கொலைகள், கொள்ளைகள் அதிகமாக நடைபெறுவதை செய்திகள் மூலமாக அறியமுடிகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சமூக அமைதி காக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும்.

34460cookie-checkதஞ்சையில் ஆடிட்டர் வெட்டிக்கொலை பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!