மாநாடு 14 May 2022
தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கோவையை சேர்ந்த சிறுமிக்கு கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக பெற்றோர்கள் செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் ஆன்லைன் வகுப்பு நேரம் போக மீதமுள்ள நேரங்களில் அந்த செல்போனில் இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் செய்துள்ளார் சிறுமி அதன்மூலம் இன்ஸ்டாகிராமில் நட்பான தோழியிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததால் பெற்றோர்கள் கண்டித்திருக்கிறார்கள் இதனால் மனமுடந்த சிறுமி திடீரென வீட்டிலிருந்து மாயமாகி விட்டார். அவரை அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் சிறுமி பயன்படுத்திய செல்போனுடன் மாயமானது தெரியவந்திருக்கிறது. இதனையடுத்து காவல்துறையினர் மாணவியை அவர் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் மூலம் தேடி கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருக்கும் தோழி ஒருவரின் மூலம் காவல்துறையினர் மாயமான சிறுமியிடம் தோழியை இன்ஸ்டாகிராம் மூலம் பேச வைத்துள்ளனர். அப்போது காணாமல் போன மாணவியிடம் சக தோழியை என்னையும் கூப்பிட்டிருக்கலாமே நானும் வந்திருப்பேன் எங்க டி போயிட்டுருக்க என்று பேச வைத்துள்ளனர்.அப்போது மாணவி ரெயிலில் சென்று கொண்டு இருந்திருக்கிறார் அதன் காரணமாக அவரது பேச்சு விட்டுவிட்டு கேட்டிருக்கிறது.இதனையடுத்து மாணவி ரெயிலில் பயணம் செய்து கொண்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் பேசிய நிலையில் பதிவான வீடியோவில் ஒரு இடத்தில் ரெயில் வண்டி இருப்பதை காவல்துறையினர் பார்த்திருக்கிறார்கள்.அப்போது அந்த ரெயில் கோவை-சென்னை விரைவு ரெயில் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரெயில் புறப்படுகின்ற நேரம், சென்றடையும் நேரத்தையும் கணக்கிட்டு மாணவி செல்போன் சிக்னலை வைத்தும் அரக்கோணம் அருகே ரெயில் செல்வதை உறுதி செய்தனர். மாணவி முன்பதிவில்லாத பெட்டியில் பின் பகுதியில் அமர்ந்திருப்பதனையும் ரெயில்வே காவலர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
அரக்கோணம் ரெயில்வே காவலர்களுக்கு மாணவியின் புகைப்படத்தையும், சிறுமியின் உடை அடையாளத்தையும் தெரிவித்துள்ளனர். ரெயில் அரக்கோணம் சென்றதும் ரெயிலில் பயணம் செய்த மாணவியை ரெயில்வே காவலர்கள் மீட்டுள்ளனர்.
அதன் பறகு அவரை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள் . பிறகு காவலர்கள் மாணவியிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக சென்னையை சேர்ந்த விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளதும் பெற்றோர் கண்டித்ததால் அவருடன் தங்குவதற்காக மாணவி சென்னைக்கு சென்றது தெரிய வந்ததுள்ளது விசாரணைக்குப் பிறகு மாணவிக்கு அறிவுரை வழங்கி அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் காவலர்கள்.