மாநாடு 11 July 2022
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஆர்.கே நகர்,சோமநாதன் கோவில் குடியிருப்பு பகுதியில் 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசிக்கின்றனர். அனைவரும் விவசாயக் கூலி தொழிலாளர்கள. இவர்களின்
பிள்ளைகள் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களின் வீட்டிற்கு மின்சார வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு கஷ்டப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துகளால். உயிருக்கு அபாயமான பகுதியாகவும் இருக்கின்றது. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மின்சார வசதி இணைப்பு கேட்டு பல தடவை மனு கொடுத்தும் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை என்கிற காரணத்தினால், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கவனம் செலுத்தி மாணவர்களின் கல்வி நலன் உள்ளிட்ட பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு.மின் வசதி இணைப்பு செய்து தர வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வி.ராஜமாணிக்கம் தலைமையில் எம்.சித்திரவேலு, செ.ராமன், பா.சகுந்தலா, ச.லட்சுமி உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை இன்று கொடுத்தார்கள்.
