Spread the love

மாநாடு 6 May 2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது நோயின் தாக்கம் குறைந்து உள்ளதால் இந்த ஆண்டு பள்ளிகள் இயங்க ஆரம்பித்தன அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நேற்று 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால் நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர். இதில் புதுச்சேரியில் மட்டும், 16 ஆயிரத்து 802 மாணவ – மாணவியர் பங்கேற்க உள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்காக மாநிலம் முழுதும், 3,936 தேர்வு மையங்களும், தனி தேர்வர்களுக்கு 147 மையங்கள் மற்றும் சிறை கைதிகளுக்கு 9 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 17,194 மாணவர்களில் 847 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் கூறப்படுகிறது. தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் ஆன நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று, திருவாரூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 16,294 மாணவ மாணவிகளில் 738 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

33830cookie-checkஇத்தனை மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம்

Leave a Reply

error: Content is protected !!