மாநாடு 08 March 2023
தாய்மொழி தமிழ் மொழியை காப்பதற்காக தனது மாணவப் பருவத்தில் தளபதியாய் களத்தில் நின்றவர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த எல்.கணேசன்.
இன்றைக்கு திமுகவில் இருக்கிற பலருக்கும் முன்னோடி இவர். எல்.கணேசன் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத, மறக்க முடியாத பெரும் சக்தி. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதையொட்டி திருச்சி கே.எம்.சி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை முடிந்து தஞ்சையில் இருக்கும் வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். அவரை காண்பதற்காக நேற்று
மாலை 5 மணி அளவில் நீர்வளத்துறை அமைச்சர் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன்,தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் , தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், ஒரத்தநாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுகவின் முக்கிய புள்ளிகளும் நலம் விசாரிக்க நேரில் அவரது இல்லத்திற்கு வந்திருந்தார்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மன்ற மாவட்ட செயலாளர் தரும.கருணாநிதி உள்ளிட்ட பலரும் அப்போது உடன் இருந்தார்கள்.
யார் இந்த எல்.கணேசன் ? என்ன செய்துவிட்டார்? ஏன் கட்சியை மீறி இவர் மீது பலருக்கும் பற்று? அறிய வரும்
மாத இதழை படியுங்கள்.