மாநாடு 26 November 2025
தஞ்சாவூர் மாநகராட்சியில் பல கோடி மோசடி என்கிற தலைப்பில் செய்தியை துணிச்சலாக 2023 ஏப்ரல் மாதம் வெளிவந்த அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு, புலனாய்வு இதழில் வெளியிட்டு இருந்தோம்.

அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரின் முடிச்சூடா மன்னனாக, ராஜராஜ சோழனாக முன்னாள் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரை சில அச்சு ஊடகங்களும், சில காட்சி ஊடகங்களும் போற்றியும் , புகழ்ந்தும் தொடர்ந்து செய்தி வெளியிட்டது பலருக்கும் இன்றும் நினைவில் இருக்கலாம்.
அதனைத் தொடர்ந்து மேலும் பல செய்திகளை மாநாடு செய்தி குழுமத்தில் வெளியிட்டு வந்தோம் அதில் பல முறைகேடுகளை, முறைகேடுகளுக்கு காரணமானவர்களை, சுட்டிக்காட்டி தட்டி கேட்டு கேள்வி எழுப்பியிருந்தோம்

அவர்களில் பலர் தற்சமயம் ஒருவர் பின் ஒருவராக லஞ்ச ஒழிப்புத்துறையிலும் சிக்கி வருவது நாள்தோறும் செய்திகளாக வெளிவந்து நாறி கிடக்கிறது.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் பொறுப்பேற்ற காலங்களில் பல்வேறு கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டுவது, மாநகராட்சி சார்பில் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பூங்காக்கள் அமைப்பது , மாநகரில் பல

சாலைகள் போடுவது, பல ஒப்பந்தங்கள் போடுவது என பல பெரும் பணிகள் பல கோடிகளில் தஞ்சாவூரில் நடைபெற்றது ,

ஏனெனில் தஞ்சாவூர் மாநகராட்சி எழில்மிகு நகராக அதாவது (Smart City ஆக்க) மேம்பாட்டு திட்டத்திற்காக பல கோடிகள் வந்து இறங்கியது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி ஆனதா தஞ்சாவூர் என்று பார்த்தால்? சுமார் சிட்டியாக இருந்த போது இருந்த எழில் அழகும் , நேர்த்தியும் அழுகிப்போன காய்கறியை.. பழுதான பிரிட்ஜில் வைத்தது போல் ஆகிவிட்டது தற்போதைய தஞ்சாவூர் என்பதற்கு



தற்போதைய காட்சிகளே சாட்சிகளாக நிற்கிறது. இதற்கெல்லாம் காரணம் முன்னாள் ஆணையராக தஞ்சாவூர் மாநகராட்சியில் இருந்த சரவணகுமார் மட்டுமா என்றால் இல்லை அப்போது மாநகராட்சியில் பல்வேறு பிரிவுகளில் பணியில் இருந்தவர்களும், பல ஊருக்கு மாறுதலாகி சென்றவர்களும், தற்போதும் இங்கேயே இருப்பவர்களும் என முறைகேடுகளில் பலரும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது போகப் போக மிக விரைவில் தெரியவரும். அவர்களின் ஆதாரத்தை திரட்டி ஆதாரத்தோடு வெளியிட அவர்களின் சொத்து பட்டியலை நாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஒரு ஜனநாயக வாதியாக, இந்திய குடிமகனாக எமக்கு இருக்கும் உரிமையை கேட்டு தெரிந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணில் வெளியிட கேட்ட போதெல்லாம் நொட்ட சாக்குபோக்கு நிறைய சொல்லி பலரும் தப்ப நினைத்தனர் அவர்களுக்கு அமலோற்பவம் போன்ற அலுவலர்கள் துணை நின்றனர் , அப்போதே நாம் செய்தி வெளியிடும் போதெல்லாம் குறிப்பிட்டது போல பணி ஓய்வு பெற்று விட்டாலும், ஊரை விட்டு வேறு ஊர் மாற்றிச் சென்று மீண்டும் இந்த ஊருக்கு வந்தாலும் அல்லது வேறு எங்கு இருந்தாலும் குற்றம் செய்தவர்களை சட்டம் விடாது என்று பலமுறை சுட்டிக்காட்டியிருந்தோம். அதேபோல தற்போது முன்னாள் ஆணையர் சரவணகுமார், பல்வேறு கட்டடங்களை பச்ச பிள்ளை சுரண்டினால் கூட கையோடு வரும் அளவிற்கு


சுரண்டலோடு கட்டி எழுப்பியுள்ள தஞ்சாவூர் மாநகராட்சி பொறியாளர்கள் பலரையும் பொறிவைத்து வழக்கு பதிந்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. அவர்களில் மெச்சக்கூடிய அளவுக்கு மிச்சம் மீதி இல்லாமல் மிகச் சிறப்பாக சாலை போட்டு சாதனை படைத்த தஞ்சாவூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர்

கார்த்திகேயன் JE (transfer) , கண்ணா பின்னா கட்டடத்துக்கு என்னா ஏது என்று கேட்காமல் நமக்கு ஆனா போதும் என்று சம்பளமும்.. வாங்கிக் கொண்டிருந்த மாநகராட்சி உதவி பொறியாளர்

ரமேஷ் AE, கட்டிட அனுமதிகள் , நகரமைப்பு பணிகள், ஒட்டு மொத்தத்தில் தஞ்சாவூர் எப்படி அமைய வேண்டும் என்கிற அமைப்பை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் இருந்த
பொறியாளர் ஜெகதீசன் ( ஓய்வு ) ,

ராஜசேகர், ஒப்பந்ததாரர் மணி சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

பொதுவாகவே பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் லஞ்ச ஒழிப்புத் துறையில் நாம் புகார் கொடுத்த உடனே வழக்கு பதிந்து நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள். எப்படி நகர்வுகள் நடவடிக்கைகள் இருக்கும் என்றால் நமது கிராமத்து பக்கம் மாட்டை முளைக்குச்சியில் கட்டி மேய விடுவது போல இங்கும் குற்றம் புரிந்ததாக உணரும் நபர்களை கண்காணித்து அப்படியே மேய விடுவார்கள் சரியான நேரம் பார்த்து வழக்கில் கொண்டு வந்து விசாரணை தொடங்கி விட்டால் வாழ்க்கையே போய்விடும் என்பதை பொது ஊழியர்கள் அரசு ஊழியர்கள் உணர்வது கிடையாது, அப்படியே உணர்ந்தாலும் பணியில் கிடைக்கும் போதே சுருட்டி கொள்வோம் மாட்டிக்கொண்டால் சுருட்டியதில் கொஞ்சம் எடுத்து நீட்டி செலவு செய்தால் வந்துவிடலாம் என்கிற நினைப்பில் எகத்தாளத்தோடு பல அலுவலகங்களிலும் சில அலுவலர்கள் செயல்படுவதை நாள்தோறும் நாம் காண முடியும். தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது நால்வர் மீது வழக்கு பதிந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை என்பதுதான் வெளியே வந்திருக்கிறது. மாட்ட போகும் பலரும் மாநகராட்சியில் இன்னமும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த கட்சிகளில் முதலாவதாக அதனை கண்டித்து அவர்களின் ஒருவர் கூட தப்பக்கூடாது , ஒருவேளை சோறு மட்டுமே உண்ணும் ஏழைகளின் வரிப்பணத்தில் வசதியாக வாழும் அதிகாரிகள் அரசுக்கும் நட்டத்தை ஏற்படுத்தி சாமானிய பொது மக்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று உணர்ந்து கீழ்க்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார் புரட்சி பாரதம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆதி.இல. அறிவுடை நம்பி ..
அதில் குறிப்பிட்டு இருப்பதாவது :
தஞ்சை மாநகராட்சியில்
சுகாதாரம் ,மின்சாரம்,
சாலை ,வரி வசூல் ,
ஆக்கிரமிப்பு அகற்றம் ,
புதிய பணியாளர் நியமித்தல்,
புதிய ஒப்பந்தங்கள் விடுதல் அதற்கு செய்த பணிகள் ,
புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்குதல்,
புதிய வரி விதிப்பு ,
புதிய வாகனம் வாங்குதல், மார்க்கெட் பகுதிகளில் கடைகள் ஒதுக்குதல், கட்டடங்கள் பராமரித்தலும், பழுது நீக்குதலும் , வாடகை வசூல் உள்ளிட்ட இன்னும் பிற இனங்களில்
மேற்கண்ட
குப்பை சரவணக்குமார் புரிந்துள்ள பணிகளிலும் முறைகேடு நடந்திருப்பதற்கும் ஊழல் புரிந்திருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாலும் இவருக்கு துணையாக இருந்த மாநகராட்சி பணியாளர்கள் பொறியாளர் கார்த்திகேயன், ஜெகதீசன் ,ராஜசேகர் , உள்ளிட்டவர்கள் கையெழுத்திட்ட அனைத்து பணிகளையும் விரிவான தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசையும்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தையும்
தஞ்சை மாவட்ட
புரட்சி பாரதம் கட்சி
சார்பில்
வலியுறுத்துகிறோம்

அப்போது மட்டும் தான் முறைகேடா? இப்போது இல்லையா? DVACல்
இப்போது 4 பேர் ! அடுத்தடுத்து யார் ? அதிரடி செய்திகளை அடுத்தடுத்து வெளியிடும் மாநாடு
