இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (State Bank of India) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அலர்ட் கொடுத்துள்ளது. எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கிவிட்டதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், ஆதாருடன் பான் கார்டு இணைக்க வேண்டியது கட்டாயம். அப்படி இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செயலற்றதாகிவிடும். அதன்பின் பான் கார்டை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது.
வாடிக்கையாளர்கள் அனைவரும் தடையில்லா வங்கி சேவைகளை அனுபவிக்கவும், அசவுகரியத்தை தவிர்க்கவும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டுமென அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.ஆன்லைனிலேயே ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்துவிடலாம்.
வருமான வரித்துறை இணையதளத்துக்கு (https://www.incometax.gov.in/iec/foportal செல்லவும்.
அதில் உள்ள Link Aadhaar பகுதிக்கு செல்லவும்.
அதில் ஆதார், பான் கார்டு விவரங்களை பதிவிட்டால் இரண்டு கார்டுகளும் இணைக்கப்பட்டுவிடும்