மாநாடு 20 May 2022
திமுக சார்பில் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனையை விளக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும் திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் அதன்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொன்னேரியில் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற பேச்சாளரும் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் தற்போதைய தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் இருக்கின்ற திண்டுக்கல் ஐ.லியோனியை அழைத்திருந்தார்கள். அதில் அவர் பேசிய போது திமுகவின் கடந்த ஓராண்டு சாதனையை நூறு ஆண்டு சாதனைகளுக்கு சமமாக செய்திருக்கிறார் நமது தளபதியார் என்று பேசிக்கொண்டே வரும் போது தலையில் செருப்பை வைத்து சுமந்து கொண்டு இருந்தவர்களையும் மேயராக ஆக்கியிருக்கிறார் நமது தளபதியார் என்று பேசி இருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் இவ்வாறாக லியோனி பேசிய பேச்சை கண்டித்து வருகிறார்கள்.
அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் திண்டுக்கல் ஐ லியோனி கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் அதில் அவர் குறிப்பிட்டதாவது:
செருப்பை தலையில் சுமந்த சமூகத்தவரை மேயராக்கியதாக சொல்லும் லியோனி அவர்களே
அடித்தட்டு மக்களாகிய நாங்களும் பலரை முதலமைச்சராக, அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியிருக்கிறோம். ஏன் உங்களைக் கூட பாடநூல் கழகத் தலைவராக்கியிருக்கிறோம்
எங்கள் தலையிலாவது செருப்பு இருந்தது உங்கள் தலையிலெல்லாம் என்ன இருந்தது?
இதெல்லாம் அதிகாரத் திமிரின் உச்சம்..!
இது தான் நீங்கள் கட்டி காப்பாற்றி வரும் சமூகநீதியா..?
வாழ்க திராவிட மாடல்
என்று குறிப்பிட்டிருக்கிறார் சீமான்.
ட்விட்டர் லிங்க் : https://twitter.com/SeemanOfficial/status/1527669131809783808?t=uLIRB3KARdo5Y7ZSEQzRJg&s=19