மாநாடு 7 May 2022
இந்த ஆண்டு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யும் நடைமுறை இருப்பதாலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் முன் வைத்திருந்தார்கள்.முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வு நடைபெறும் நாட்களில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மே14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிப்பதாக இன்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 13ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
