பெத்தேல் நகரில் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் தருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ள பெத்தேல் நகரில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்பு சார்ந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கடந்த 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முறையான மின் இணைப்பு குடும்ப அட்டை வாக்காளர் அட்டை உட்பட அனைத்தும் வைத்துள்ளோம்.வீட்டு வரி கட்டி கொண்டிருக்கின்றோம்.ஏறத்தாள 30 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம் எனக்கூறி ஆக்கிரமிப்புகளை இடிக்க விடாமல் குடியிருப்புவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் சென்னையில் பெத்தேல் நகரில் புறம்போக்கு இடத்தை காலி செய்வதாக உறுதியளிக்கும் மக்களுக்கு மாற்று இடம் என தருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அம்மக்களிடம் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளாக இங்குதான் இருந்து வருகிறோம் நாங்கள் வீடு கட்டுவதற்கு அனுமதி அளித்ததே இந்த அரசு அதிகாரிகளும் இந்த அரசுகளும் தான் அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது கடன் பெற்று நாங்கள் பலர் வீடு கட்டி இருக்கின்ற நிலையில் ஒரு தனிநபர் போட்ட பொதுநல வழக்குக்காக எங்களை காலி செய்ய சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றார்கள்.
மாற்று இடம் தருவதாக சொல்கிறார்களே என்று நாம் கேட்டபோது :
அந்த மாற்று இடம் என்பது மழைக்காலங்களில் மழை வெள்ளம் முழுவதுமாக நிரம்பும் இடம், ஏற்கனவே பல குடியேற்றங்கள் காலி செய்த போது அந்த பகுதி மக்களை இங்குதான் குடியேறினார்கள் அதற்குப்பக்கத்திலேயே தான் இன்னொரு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி இருக்கிறார்கள் அங்குதான் எங்களுக்கு இடம் ஒதுக்குவதாக சொல்கிறார்கள்.
இதற்கு அடுத்த குடியிருப்பு பகுதியில் தான் தமிழக அரசு வீடுகள் தருவதாக சொல்கிறதாம்.
ஒருவேளை நாங்கள் அங்கு போவதற்கு சம்மதித்தாலும் கூட நாங்கள் இங்கு வீடு கட்ட வாங்கிய கடனை யார் அடைப்பது?தமிழகத்தில் பல அரசு அலுவலகங்கள் மேற்கொண்டு நீர் நிலைகள் மேல்தான் கட்டியிருக்கிறார்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் என்று சேர்த்து நாங்கள் கட்டிய வீட்டை இடிப்போம் என்பது எந்த வகையில் நியாயம் என்கிறார்கள்.