Spread the love

மாநாடு 6 July 2022

கிராமத்து பக்கம் ஒரு பழமொழி சொல்லுவாங்க பேரு தான் பெரிய பேரு வீட்ல பாத்தா குடிக்க கூட கூழ் இல்ல என்று . அதுபோல நிலையில் தான் இப்போது தஞ்சாவூர் மாநகராட்சி இருக்கிறது.

நகராட்சியாக இருந்தபோது ஏதோ ஒரு தெரு சரியில்லாமல் இருந்த தஞ்சாவூரில் இப்போது ஏதாவது ஒரு தெரு நல்லா இருக்கிறதா, தூய்மையாக இருக்கிறதா என்று தேட வேண்டிய நிலையில் சுகாதாரமற்று இருக்கிறது.

தஞ்சாவூர் எழில் மிகு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது, அந்த பணிகளுக்காக பல்வேறு இடங்களை கடைகளை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஈடுபட்டிருந்தார், அதன்படி அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தனியாரிடம் இருந்த 100 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு சொத்துக்கள் மீட்கப்பட்டது. அதற்காக தெற்கு வீதி பகுதிகளில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டது, அதன் காரணமாக சாக்கடையின் கழிவு நீர் சாலைகளில் ஓடுகிறது, மழை நேரங்களில் தஞ்சையின் கூவமாகவே தெற்கு வீதி மாறிவிடுகிறது, அவற்றையெல்லாம் இது நாள் வரை சீர் செய்யாமல் இருக்கிறது தஞ்சாவூர் மாநகராட்சி.

இவை அனைத்தையும் விரைந்து சரி செய்து பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மாநகராட்சியின், மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும் . உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது மக்களுக்காக பணி செய்ய தஞ்சாவூர் மாநகராட்சிக்கு மேயரும் இருக்கிறார். இன்று காலை கூட மேயர் பர்மா பஜார் பகுதிக்கு ஆய்வுக்காக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தஞ்சாவூர் ராசா மிராஸ்தார் அரசு மருத்துவமனை எதிரில் தஞ்சாவூர் நிர்வாகத்தின் சார்பில் பெரிய எழுத்தில் எனது குப்பை எனது பொறுப்பு என்று எழுதி இருக்கின்ற இடத்திலேயே குப்பைகள் அள்ளாமல் நெகிழித்தாள்களோடு துர்நாற்றம் வீசி கொண்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து நாம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அனைத்து குப்பை தொட்டிகளும் அள்ளப்படுகின்றனவா என்பதை அறிய சென்றோம். ஆனால் தினந்தோறும் அப்புறப்படுத்த வேண்டிய குப்பைகள் முக்கியமான இடங்களிலேயே அப்புறப்படுத்தப்படாமல் அசுத்தமாக இருந்தது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில்: பல்லாயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் நோய்களை தீர்ப்பதற்காக வருகின்ற தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திரிக்கு எதிரிலேயே

அள்ள படாமல் கிடக்கின்ற குப்பைகள்.

பனகல் கட்டிடத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்குகின்ற நிலையில் அதன் வெளியிலேயே

அள்ளப்படாமல் கிடைக்கின்ற குப்பைகள்.

கீழவாசல் மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகள்,

கீழவாசல் செயின்ட் பீட்டர்ஸ் பள்ளிக்கூடம் வெளியில்

கிடைக்கின்ற குப்பைகள்,

பர்மா பஜார் பகுதியில் மாநகராட்சி குப்பைத் தொட்டிகள் இல்லாததால் கீழே

போடப்படும் குப்பைகள் இப்படி ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திலேயே அசுத்தங்கள் அகற்றப்படாமல் நிரம்பி கிடைக்கின்றது தஞ்சாவூர். இவற்றையெல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும்.

நகராட்சியாக இருந்தபோது ஊழியர்களுக்கு சம்பளம் போடாமல் சம்பள பாக்கி இருந்த போது கூட தஞ்சாவூர் இவ்வளவு அசுத்தமாக இருந்ததில்லை, ஆனால் இப்போது சிறந்த மாநகராட்சி என்று விருது வாங்கிய தஞ்சாவூர் . பெயருக்கேற்ற ஊராக இருக்கிறதா என்கிற கேள்வியை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

என் குப்பை என் பொறுப்பு என்கிற வாசகம் மிக சிறப்பு. மாநகராட்சி குப்பைத் தொட்டியில் அள்ள படாமல் இருக்கும் குப்பைக்கு யார் பொறுப்பு.

41870cookie-checkதஞ்சாவூரில் இதற்கு யார் பொறுப்பு

Leave a Reply

error: Content is protected !!