மாநாடு 7 June 2022
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த எல்கேஜி ,யுகேஜி மழலையர் வகுப்புகளின் மாணவர்கள் சேர்க்கையை இந்த ஆண்டு அரசு இதுவரை நிறுத்தி வைத்துள்ளது உடனடியாக அரசுப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டிலேயே மழலையர் வகுப்புகளில் மீண்டும் மாணவர்களின் சேர்க்கையை தொடங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதன் விபரம் பின்வருமாறு:
தமிழ்நாடு முழுவதும் அரசு துவக்கப் பள்ளிகள் பலவற்றில் மழலையர் வகுப்புகள் துவக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது . ஏழை ,எளிய,நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் படிப்பதற்கு மழலையர் தொடக்கப் பள்ளிகள் பெரிதும் உதவிகரமாக இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் செயல்படுவதை நிறுத்தியுள்ளது . இந்த நடவடிக்கை காரணமாக தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் சேர்க்கை எண்ணிக்கை அதிகமாகி வருவது தெரிய வருகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி, தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் பாரபட்ச நிலையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும், தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்கூட்டியே நடத்தியுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்காதது கண்டிக்கத்தக்கது, இந்த நடவடிக்கைகள் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவும் அரசுப் பள்ளிகளுக்கு பாதகமாகவும் உள்ளது.
தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக பொதுமக்கள் அரசு பள்ளிகளை புறக்கணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளதாகவே கருதப்படுகிறது ,எனவே இந்தக் கல்வி ஆண்டிலேயே அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் வகுப்புகள் துவக்கப்பட வேண்டும் ,
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கி முடிவடைந்துள்ள நிலையில் , அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனடியாக துவக்கப்பட வேண்டும் ,தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகள் திறக்கும் நாளிலேயே , தனியார் பள்ளிகளும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அனுமதி பெறாமலும், விதிமுறைகளை மீறியும் செயல்படுகின்ற தனியார் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நகழ்வில் பேசிய பலரும் அரசின் இந்த போக்கை கடுமையாக விமர்சனம் செய்து தங்களது கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
அதன்படி இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அரவிந்த் சாமி பேசுகையில், சமீபகாலமாக சில ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு அரசு பள்ளிகள் என்றாலே தரமற்றது என்பது போல காட்டப்படுகிறது .இந்த போக்கினை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் தமிழக அரசு தனியார் கல்விக்கூடங்களை ஊக்குவிக்கும் முகமாகவும் அரசு பள்ளிகளை புறக்கணிக்கும் விதமாகவும் நடைபெற்று வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது .எனவே உடனடியாக இதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் ,தவறினால் இந்திய மாணவர் சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று தனது கண்டன உரையில் தெரிவித்தார்.
இதுவரையில் தமிழகத்தில் 13 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறது அதனையும் உடனடியாக அரசு திறக்க வேண்டும் என்றும்
ஒரத்தநாடு பகுதியில் தனியார் பள்ளிகளை திறந்து வைப்பதற்காக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்து இருந்ததையும் இவர் எப்படி அரசு பள்ளிக்கு சாதகமான நடவடிக்கைகளை எடுப்பார் என்ற ஐயமும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் அங்கிருந்த மகளிர்கள் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பி கோரிக்கையை முன் வைத்தார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசுப்பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அ.வெங்கடேசன், இரா.பிரசன்னா, கோ.சக்திவேல் ஆகியோர் தலைமை வைத்தார்கள். கனிமொழி ,சரண்யா, கவிதா, ஜான்சிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருக்காடிப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளருமான முத்து உத்திராபதி கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அரசு பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் என்.குருசாமி, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில நிர்வாகி ஜி.அரவிந்தசாமி, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, துணை தலைவர் ஆர்.பி.முத்துக்குமரன், மற்றும் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் த.கிருஷ்ணன், வேணுகோபால், ராஜமாணிக்கம், பழனியப்பன்,கார்த்தி,பெர்னாட்சா, ராமகிருஷ்ணன், சிவாஜி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்கள். முடிவில் அரசு பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாவட்ட நிர்வாகி இரா.அருணாசலம் நன்றி கூறினார்.
இதே நாளில் செவிலியர்கள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,
துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இது போன்ற பல போராட்டங்கள் தமிழகத்தில் பல பகுதிகளிலும் நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும் போது இது தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று திமுகவின் சார்பில் உள்ளவர்களும் வேதனைப் படும் அளவிற்கு தற்போதைய ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.
வீடியோ லிங்க் இதோ:https://youtu.be/RvMewGtgB2k