மாநாடு 7 October 2022
தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பழமையானதும், பெருமை வாய்ந்ததும் ஆகும். தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல் சுற்றி வாழ்கின்ற ஏழை ,எளிய மக்கள் மிகவும் நம்பி இருக்கின்ற மருத்துவமனை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை .மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் இருந்த காலத்தில் கொண்டுவரப்பட்டது.
அதன் பிறகு வந்த ஆட்சி காலங்களிலும் மருத்துவமனையின் மேம்பாட்டிற்காக அரசுகளும் நிதிகளை ஒதுக்கி, முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களும் சேவையாற்றி வருகிறார்கள்,இருந்த போதும் அவ்வப்போது மருத்துவமனையின் முதல்வராக பொறுப்பேற்கும் சிலர் தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், அலட்சியத்தாலும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மாண்பை குறைக்கும் வகையில் செயலாற்றி வந்திருக்கிறார்கள், அதன் காரணமாக மருத்துவத்திற்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களுக்கு துணையாக வருபவர்களுக்கும் பெரும் அவதி ஏற்பட்டது என்பதை மறைக்கவும், மறுக்கவும் முடியாது, சுகாதார சீர்கேடும் இருக்கிறது, குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் செவிலியர்களுக்கு இயற்கை உபாதைகள் கழிப்பதற்கு கூட கழிப்பிடங்கள் இல்லாமல் இருக்கிறது,
இங்கு பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் கையெழுத்திடுவதற்கு கூட ஒவ்வொரு நாளும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கதவை மருத்துவமனை நிர்வாகம் மூடி வைத்திருக்கிறது, இவற்றையெல்லாம் விரிவாக ஆதாரத்தோடு நமது மாநாடு இதழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் ஏற்கனவே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வராக இருந்த மருத்துவர் மருதுதுரை அந்தப் பணியில் இருந்து மாற்றப்பட்டு, தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பாளராக இருக்கின்றார், தற்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக நேற்று மருத்துவர் பாலாஜி நாதன் என்பவர் பதவியேற்று இருக்கிறார்,
அதன் பிறகு பத்திரிகையாளர்களின் வாயிலாக மக்களுக்கு கூறியதாவது:
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது, திசு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது திசு சிகிச்சையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் அதிக அளவில் நமது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக தமிழக அளவில் 3வது இடத்தை பிடித்தது நமது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ,இதனை 1வது இடத்திற்கு கொண்டு வருவதற்காக மருத்துவர்கள் சேவையாற்றி வருகிறார்கள், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்றிதழ் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அதன்படி நோயாளிகளை பணிவாக கவனித்தல் நோயாளிகளுக்கு நிறைவாக சிகிச்சை அளித்தல் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் இனி அதிகம் கவனம் செலுத்தும், மேலும் வெளி நபர்களின் நடமாட்டங்களை குறைப்பதற்காக 25 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும், வளாகத்தில்
நாய்கள் மாடுகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும், இங்கு ஏற்கனவே நோயாளிகளின் சிகிச்சை முறைகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருகிறது, அதில் சில மாற்றங்கள் செய்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது இதன் மூலம் நோயாளி தமிழகம் முழுவதிலும் உள்ள மருத்துவமனையில் தன்னிடம் உள்ள அடையாள அட்டையை காட்டி மருந்துகளும் மருத்துவமும் பெறலாம். மேலும் பண்நோக்கு மருத்துவ சிகிச்சை மையத்தின் அருகிலேயே சிடி ஸ்கேன் ,எம்ஆர்ஐ ஸ்கேன் அமைக்கப்படும். தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும், பெண் காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
தற்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் மருத்துவர் பாலாஜி நாதன் இதற்கு முன்பாக தேனியில் பணியாற்றிய போது மக்கள் போற்றும் படி திறம்பட பணியாற்றியிருக்கிறார் என்றும் பணிபுரிந்த இடத்திற்கு பல விருதுகளையும் பெற்று கொடுத்திருக்கிறார் என்று தெரிய வருகிறது.
தற்போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக பதவி ஏற்றிருக்கும் மரு.பாலாஜி நாதனின் பணி சிறக்க வாழ்த்துக்களை மாநாடு இதழ் தெரிவிக்கிறது ,அதோடு பல மாதங்களாக மருத்துவ கல்லூரி மருத்துவ மனையின் கடைசி கதவு திறக்கப்படாமல் இன்று வரை மூடப்பட்டு இருக்கிறது, இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி கூறுகிறார்கள் ,வயதானவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் ,நோயாளிகளை காண வருவதற்கு கூட மிகவும் துன்பப்படுகிறார்கள், உடனடியாக துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடைசி கேட்டை திறக்க வேண்டும்,
கிரிஸ்டல் என்கின்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் இன்னமும் மக்களிடம் பணம் பிடுங்குவதையும் ,மரியாதை குறைவாக பேசுவதையும் தொடர்ந்து வருகிறார்கள், அவர்களை கண்டித்து அடக்க வேண்டும். மேலும் உள்ள பல சிக்கல்களை களைந்து உண்மையிலேயே தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறந்து விளங்க தாங்கள் பணிபுரிய வாழ்த்துக்கள். இன்னும் சில மாதங்கள் கழித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏற்கனவே இருந்த நிலையையும், அப்போது உங்கள் நடவடிக்கையால் இருக்கின்ற நிலையும் செய்தியாக நமது மாநாடு இதழ் வெளியிடும்.
ஏற்கனவே நமது மாநாடு இதழில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பற்றி வந்த செய்தியும் ,வீடியோவும் லிங்க் https://maanaadu.in/tmch/