மாநாடு 19 ஏப்ரல் 2023
சமீப காலமாக அரசியல் பதிவுகளுக்கு செலவு செய்யும் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதால் அவ்வளவு தொகையை செலவு செய்து பதவிக்கு வருபவர்கள் மக்களுக்காக உழைக்க முடியாமல் மக்களை வைத்து பிழைக்க எண்ணுவதால் ஊழலும் முறைகேடுகளும் பல்கி பெருகி வருகிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.
சமீப காலமாக வட்டம் ,மாவட்டம், ஊராட்சி பேரூராட்சி என்று பெரும்பாலான பகுதிகளிலும் தங்கள் பதவிக்கு தகுந்தவாறு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை சம்பாதிக்க… முதலீடு செய்த பணத்தை மீண்டும் எடுப்பதற்காக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பதவிகளில் உள்ளவர்கள் அரசுக்கு இழப்பீடு உண்டு பண்ணி வருவதாக தெரிய வருகிறது.
அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியில் சாலைகள் போடுவது மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களையும் தனக்கு கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு யார் அதிக கமிஷன் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே அந்தந்த ஒப்பந்தங்கள் தரப்படுவதாகவும், ஒப்பந்ததாரர்கள் தரமானவர்களா? அவர்களிடம் வேலை கொடுத்தால் சரியாக தரமாக செய்வார்களா என்பதையெல்லாம் தற்போது பார்ப்பதில்லையாம், அதனால் அரசின் பணமும் வீண் விரையம் ஆகி மக்களுக்கும் தரமான சேவைகள் கிடைக்கவில்லை என்று சில தரமான ஒப்பந்ததாரர்கள் தங்கள் பெயரை குறிப்பிட வேண்டாம் அது எங்கள் பிழைப்புக்கு இடைஞ்சல் ஆகிவிடும் என்று கேட்டுக்கொண்டு திருவையாறு பேரூராட்சியில் நடைபெறுகின்ற அவலங்களை அடுக்கினார்கள்.
திருவையாறு பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி தரமான ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தங்களை கொடுத்து மக்களிடம் நல்ல பேரை தன் கட்சிக்கு ஈட்டி கொடுக்க வேண்டும் என்று உண்மையான கட்சி விசுவாசிகள் எதிர்பார்க்கிறார்கள். தவறுகளை களைந்து திமுகவிற்கு நல்ல பெயரை ஈட்டி கொடுப்பாரா அமைச்சர் கே.என்.நேரு பொறுத்திருந்து பார்ப்போம்.
அதிக தகவல்களுக்கு அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழை படியுங்கள்.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?