மாநாடு 13 May 2022
ஆத்துல போட்டாலும் அளந்து போடு என்பார்கள் ஆனால் ஆறுகளை தூர்வார ஒதுக்கப்பட்ட 62 கோடி ரூபாய் நிதியில் முறையாக தூர் வாராமல், மணல் திட்டுக்களை அகற்றாமல் ஆட்டையை போட்டார்களா திமுகவினர் என்கிறார்கள் பொதுமக்கள்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் மக்களிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் பல்வேறு அதிகாரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார், பல ஊடக சந்திப்பின் போது எனது தலைமையிலான திமுகவின் ஆட்சி நேர்மையாகவும் ,தூய்மையாகவும் நடைபெறும் என்றும் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் பெருமைப்படும் படியும், திமுக விற்கு வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் படியும் அதாவது இவ்வாறான நல்ல ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு நாம் வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்று வருந்தும் படி மிகவும் சிறப்பாக எனது ஆட்சி இருக்கும் என்று காட்சி ஊடகங்களிலும் தனது பேச்சின் மூலம் வெளிகாட்டினார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல எதிர்க்கட்சிகளால் மட்டுமல்லாமல், பொதுமக்கள் பலராலும் இப்போது நடப்பது திமுகவின் ஆட்சி அல்ல, வெறும் புகைப்பட, நிழற்பட கண்காட்சி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது .
அதனை மெய்ப்பிக்கும் விதமாக பல நிகழ்வுகள் நம் கண் முன்னே நடந்து வருகிறது அதில் உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை இந்த செய்தியின் மூலம் அறியலாம்.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது அந்த தண்ணீரானது மாயனூர், முக்கொம்பு வழியாக கல்லணை வந்தடையும், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் டெல்டா பகுதியான திருச்சி, தஞ்சாவூர் ,திருவாரூர் நீர் பாசன பகுதிகளில் நீர்ப்பரப்பி கடைமடைப் பகுதியான நாகப்பட்டினத்திற்கு வந்து சேரும்.ஆனால் கல்லணையிலிருந்து தண்ணீர் வரும் பகுதிகளில் மணல் திட்டுகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும், ஆற்றில் நடந்த மணல் திருட்டுகளாலும் தண்ணீர் கடைமடை பகுதியை வந்து சேர்வதே இல்லை என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கைகளை வைத்து அரசுக்கு சுட்டிக்காட்டும் விதமாக பல போராட்டங்கள் செய்து வந்தார்கள். ஆனாலும் ஏனோ அவர்களின் கத்தல் கவர்மெண்டின் காதுகளில் விழாமல் இருந்தது .ஏன் இதை இப்படி குறிப்பிடுகிறோம் என்றால் கவனித்திருந்தால் இன்றுவரை அதே நிலை இல்லாமல் சரி செய்திருப்பார்கள்.
கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்ற திமுக அரசு இவற்றையெல்லாம் கலையும் விதமாக ஆட்சி நடத்துவார் என்று அவர் காட்சி ஊடகங்களில் பேசியது மூலம் எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி காவிரி டெல்டா பகுதிகளில் மணல் திட்டுக்களை அகற்றுவதற்கும் தூர் வார்வதற்கும் நீர்வழி தளங்களை சரி செய்து கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று விவசாயம் செழிக்க 62 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டது அதன்படி அந்த பணிகள் நடந்து கொண்டிருப்பதாக அரசின் சார்பில் கூறப்பட்டது ,
கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க செல்வதற்கு முன்பாக டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட ஜூன் 11ஆம் தேதி கல்லணை வந்தார் அவரோடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களும் உடன் இருந்தார்கள். ஒதுக்கப்பட்ட 62 கோடி ரூபாயில் 20 கோடி ரூபாய் தஞ்சாவூர் பகுதியில் உள்ள நீர் வழி பாதைகளை சரிசெய்ய வெண்ணாறு மணல் திட்டுக்களை அகற்றுவதற்கும் தூர் வார்வதற்கும் ஒதுக்கப்பட்டது.
திருச்சி பகுதிக்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது இதேபோல டெல்டா பகுதிகளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டது. கல்லணையை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் அதன் பிறகு தஞ்சை பகுதியில் உள்ள வெண்ணாற்றில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்ட தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டார் அப்போது துறை சார்ந்த அதிகாரிகளும் மேற்குறிப்பிட்ட அமைச்சர்களும் உடன் இருந்தார்கள் இது ஜூன் 11ஆம் தேதி 2021 அன்று முழுவதும் சில ஊடகங்களைத் தவிர அனைத்து ஊடகங்களிலும் தொடர்ச்சியாக செய்திகளில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது.


இந்த ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி இன்னும் சில நாட்களில் வரவிருக்கிறது இருந்த போதிலும் கூட வெண்ணாறு பகுதிகளில் இன்னமும் மணல் திட்டுக்கள் அகற்றப்படாமலும், சரிவர தூர்வாரப்படாமல் அப்படியேதான் இருக்கிறது


இதன் காரணமாக கடைமடை பகுதியான நாகப்பட்டினத்திற்கு இந்த ஆண்டும் தண்ணீர் செல்வதில் சிக்கல் இருக்கும் என்று அறியமுடிகிறது. இதனால் டெல்டா பகுதியில் உள்ள ஏறக்குறைய 11 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் எத்தனை லட்சம் ஏக்கர் பாதிக்கப்படும் என்று தெரியவில்லை அதனை தடுக்கும் விதமாக விவசாயிகளை காக்க உடனடியாக துரிதகதியில் மணல் திட்டுக்களை அகற்றவும் ,தூர்வாரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாகும். அதுமட்டுமல்லாமல் துரிதகதியில் இந்த பணிகளை செய்வதாக ஒப்புக்கொண்டு ஒப்பந்தங்கள் எடுத்து இன்றுவரை முழுமையாக செய்யாமல் இருக்கும் ஒப்பந்தக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திமுகவின் தலைமை மீதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரும் என்பதே உண்மை,


இனியாவவது முக்கியமான பணிகளிலாவது கட்சிக்காரர்களை பார்த்து ஒப்பந்தங்கள் கொடுக்காமல் கண்ணியமாக வேலை செய்பவர்களைப் பார்த்து ஒப்பந்தங்களை கொடுக்க அரசு முன்வர வேண்டும்.
video link: https://youtu.be/iEvU5MoEh5k
