Spread the love

மாநாடு 14 February 2022

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரும் ஏப்ரல் 6ந்தேதி உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

மலேசியாவில் தற்போது உலகின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது அதைப்போல் ஒரு முருகன் சிலையை அமைக்கச்சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த முத்து நடராஜன் 2015ல் புத்திரகவுண்டன்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே அமைக்க முடிவு செய்தார்.

இந்த மலேஷியா சிலையை வடிவமைத்த திருவாரூரைச்சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் 50 என்பவரை அழைத்து வந்து உலகில் பெரிய முருகன் சிலையை 3 கோடி ரூபாயில் கட்ட முடிவு செய்தார்.கடந்த 2016 செப் 6 ஆம் தேதி பூமி பூஜை போட்டுப்பணி துவங்கியது. கடந்த 2018ல் முத்து நடராஜன் உடல் நலக்குறைவால் இறந்தார்.ஆனால் அவரது மகன்கள் ஸ்ரீதர், வசந்தராஜன், ஞானவேல்,மகள் பத்மாவதி, ஆகியோர் பணியைத்தொடர்ந்தனர்.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று உலகில் மிக உயரமாக 146 அடி உயரத்தில் 3 கோடி ரூபாயில் கட்டப்பட்ட முருகன் சிலைக்குக் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பணி குழு நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் கூறுகையில்
உலகின் மிகப்பெரிய முருகன் சிலையான இந்த சிலை 126 அடி உயர முருகன் சிலை, 20 அடி உயர பீடம் என 146 அடி உயரத்தில் ஏழு கோண வடிவமைப்பில் அறுபடை முருகன் கோயில் கட்டப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும்
என்றார்.
ஸ்தபதி தியாகராஜன்
மலேஷியா முருகன் சிலை வேல் பிடித்தது போல் இருக்கும். இங்கு உள்ள சிலை, வலது கையில் ஆசீர்வாதம், இடது கையில் வேல், சிரித்த முகத்துடன் தலையில் மணிமகுடம் சூடி அமைக்கப்பட்டுள்ளது. ஆடை, அணிகலன் அமைத்து, பஞ்சவர்ணத்தில் வண்ணம் தீட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆசியக் கண்டத்திலும் உலகளவிலும் பெரிய முருகன் சிலையாக இருக்கும் என்பதால் சுற்றுலாத்தலமாக இந்த இடம் மாறும்
எனத் தெரிவித்துள்ளார்.

17700cookie-checkஉலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு ஏப்6ந்தேதி கும்பாபிஷேகம்

Leave a Reply

error: Content is protected !!