மாநாடு 14 February 2022 கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளில் சில தினங்களுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அடுத்து மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.முதலில் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில், பின்னர் மற்றொரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது.கல்லூரி சீருடையில் ஹிஜாப் சேர்க்கப்படவில்லை எனவும்,எனவே அதை அணிந்து வகுப்பிற்கு அனுமதிக்க முடியாது என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியது. கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்த நிலையில், மாணவிகள்,கல்லூரியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்குள் நுழைய அனுமதிக்கப்படாததற்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் சில மாணவிகள்,மாணவர்கள் கழுத்தில் காவி துண்டு அணிந்து கல்லூரிகளுக்கு பேரணியாக சென்றனர்.
இதனையடுத்து,கர்நாடகாவில் எழுந்துள்ள ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கர்நாடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இன்று முதல் பிப்.19 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.அதன்படி,உடுப்பியில் இன்று காலை 6 மணி முதல் பிப்.19 மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்