Spread the love

கரூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.அரசு பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.சமூக வலைதள நட்பு சில நாட்களில் காதலாக மாறியதாம்.

திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை காட்டி மாணவியுடன் இளைஞர் குமார் பலமுறை உறவு வைத்துள்ளார்.இவர்களின் முறையற்ற உறவு அதே பகுதியில் வசித்த மாரிமுத்து(35) என்பவருக்கு தெரியவந்துள்ளது.பின்னர் இருவரையும் மிரட்டியதோடு சமூக வலைதளங்களில் பதிவு செய்து விடுவேன் என்று மாணவியை மிரட்டி பலமுறை மாரிமுத்து உடலுறவு வைத்துள்ளார். தற்போது மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவி கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் ரூபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அதில் மாணவியை மிரட்டி வன்கொடுமை செய்த மாரிமுத்துவை போக்சோ தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கு முக்கிய காரணமான திருப்பூரை சேர்ந்த குமார் தலைமறைவாகிவிட்டதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருவதாக தெரியவருகிறது.சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதல் முறையற்ற உறவாக மாறி பள்ளி மாணவியை திரைப்பட பாணியில் ஒருவர் மிரட்டி வன்கொடுமை செய்த சம்பவம் கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10570cookie-checkதிரைப்பட பாணியில் மிரட்டப்பட்டு பலருக்கு இரையான பள்ளி மாணவி

Leave a Reply

error: Content is protected !!