Spread the love

ஜனவரி 29 2022 இன்று தேர்தல் ஜுரம் படுவேகமாக இருக்கின்ற நேரமாக இருக்கிறது.ஆனால்

2009 ஜனவரி 29 இதே நாளில்தான் பத்திரிகைத்துறையில் பணியாற்றி வந்த கு. முத்துக்குமார் என்கின்ற இளைஞர் சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவனுக்கு எதிராக வந்து திடீரென தன்மீது மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீயை பற்ற வைத்துக்கொண்டார் தன் கையில் அவர் கைப்பட எழுதி வந்த அந்தப் போராட்டத்தின் நோக்கத்தை குறிப்பதாக இருந்த காகிதங்களை காற்றில் பறக்கவிட்டார்

அது பறந்து செல்வதற்கு முன்பே இவர் உடலில் தீ பரவி முழுவதுமாக சிதைத்து இருந்தது அவர் மீது எரிந்து கொண்டிருந்த தீயை காவல்துறையினர் அனைத்து கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்கள் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறந்தார்.

அவரின் மரணச் செய்தி அன்று தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் இந்திய அரசியலை ஒரு உலுக்கு உலுக்கியது அனைத்து அரசியல் கட்சிகளும் யார் இந்த முத்துக்குமார் என்று ஆராயத்தொடங்கியது இதில் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த முத்துக்குமார் தெரிந்தவராக இருந்தார். பலரின் போராட்ட தியாகங்களும் போகிற போக்கில் மறந்து விடுவது போல தான் இன்று முத்துக்குமார் நினைவு தினத்தைக்கூட பலரும் மறந்துவிட்டார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. முத்துக்குமார் அவர்கள் எழுதிய அந்தக் கடிதத்தின் நகல் அன்று பெரும்பாலான பத்திரிகைகளில் வந்திருந்தது அதை நினைவு கூறுவதற்காக நமது மாநாடு இதழ் அதன் நகலை அப்படியே பதிவு செய்கிறது.ஜனவரி 29 முத்துக்குமார் அவர்களின் நினைவு தினமான இன்று அவருக்கு மலர் வணக்கம் .

மேலும் அதன் முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள அன்று வெளியான ஒன் இந்தியா டாட் காம் என்ற இணையச்செய்தித்தளத்தில் முத்துக்குமார் ஜனவரி 29 2009 என்று போட்டால் படித்து தெரிந்து கொள்ளலாம் .

11920cookie-checkகு.முத்துகுமார் நினைவு தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!