திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு
இன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்களை விட காளைகளே அதிக அளவு பரிசுகளைப்பெற்றது புனித அந்தோணியார் கோயிலில் தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் திருக்கானூர்பட்டியிலா ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசிகள் போடப்பட்ட வீரர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர் தஞ்சை புதுக்கோட்டை அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 680 காளைகளும் 350 வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றார்கள் சீறிவரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள்கள் மற்றும் தங்க காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. இந்தப் போட்டியானது காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது இதில் முதல் பரிசு பெற்றவருக்கு டிவிஎஸ் பைக் தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.