பாஜக தனித்து போட்டி
நேற்று மாலை அதிமுக நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேடுதலுக்கான முதற் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டது அதில் சேலம், ஆவடி, திருச்சி ,மதுரை, சிவகாசி, தூத்துக்குடி, ஆகிய 6 மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுகவின் தலைமை கூட்டாக வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று வரை பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்து கொண்டிருப்பதாக சொல்லி வந்த பாரதிய ஜனதா கட்சி சற்று நேரத்திற்கு முன்பாக அதன் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறியதாவது : நடந்து முடிந்த பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் நாங்கள் அதாவது பாரதிய ஜனதாவும் அதிமுகவும் கூட்டணி அமைத்து பல இடங்களில் வெற்றி பெற்றோம். திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஆவதற்கு நாங்கள் உழைத்து இருக்கிறோம். ஆனாலும் கூட கீழ்மட்டத்தில் எங்களால் கூட்டணியை சரிவர கொண்டு சேர்க்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் அதிகப்படியான இடங்களில் தேர்தலில் நிற்க விருப்பப் படுவதாகவும் அதனை நிறைவேற்றும் விதமாக அதிமுகவில் இருந்து விலகி தனித்து இந்த முறை நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நிற்பது என்று எங்கள் தலைவர்களோடு பேசி முடிவெடுத்திருக்கிறோம்.அதனை தெரிவிப்பதற்கான தான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்துவதாக கூறியுள்ளார் ஆனால் பாரதிய ஜனதா தனித்து நிற்பதால் அதிமுக பாஜக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை என்று கூறினார்.
நம்மிடம் பேசிய அதிமுக பொறுப்பாளர்கள் சிலர் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம் எங்களது கட்சியின் தலைமையை இதை முன்பே செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்றார்கள்.
இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஏற்படாது என்று நமது மாநாடு இதழ் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது