Spread the love

இன்றைக்கு இந்த கட்சியில் தான் இருக்கிறாரா இவர்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, இடங்கள் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வது என பரபரப்பாக இயங்கி வருகின்றார்கள்.

இந்நிலையில் அமமுக கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த எம்.சி.முனுசாமி கடந்த 29ம் தேதியன்று அமமுகவில் இருந்து விலகி தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.


நேற்று அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் பாஜக தனித்து போட்டியிடுவது என முடிவு செய்தது.

பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் அதிமுகவிலிருந்து விலகி உடனடியாக பாஜகவில் இணைந்துள்ளார். எம்.சி.முனுசாமி.
2 நாட்களுக்குள் எம்.சி.முனுசாமி அடுத்தடுத்து கட்சி தாவி இருப்பது. உள்ளாட்சி தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தான் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே இளைஞர்களுக்கு அரசியல் மேலிருக்கும் வெறுப்பை இன்னும் கூட்டுவதாக இருக்கின்றது.

13600cookie-checkஅவரையே மிஞ்சிவிடும் இந்த அமமுக நிர்வாகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!