சென்னையில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை.
பரபரப்பில் மடிப்பாக்கம்
சென்னை மடிப்பாக்கத்தில் 188வது திமுக வட்ட செயலாளராக இருந்தவர் செல்வம். இவர் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 188வது வட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட இருந்தார்.
இந்நிலையில் வெளியே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வாழ்த்துவது போல் வந்து வெட்டிவிட்டு தப்பியது அதில் படுகாயம் அடைந்த செல்வம் துடிதுடித்து இறந்தார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டார்கள்.
தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
138600cookie-checkதிமுக வட்ட செயலாளர் வெட்டிக்கொலை