மாநாடு 16 February 2022
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நேற்று 15-02-2022 சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு வைத்திருந்தார்கள்.
அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வருகிற 19ந்தேதி நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது என்றும் ஏன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பத்திரிகைகளின் வாயிலாக மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக திரைப்பட இயக்குநர் சோழன் மு.களஞ்சியம் தலைமையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் 13 தமிழ் தேசிய இயக்கங்கள் அங்கம் வகிக்கின்றன. தமிழ் தேசிய
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழ் தேசத் தன்னுரிமைக்கட்சியின் தலைவர் அ.வியனரசு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஏன் நாங்கள் நாம் தமிழர் கட்சியை சீமான் அவர்களை ஆதரிக்கிறோம் என்று அவர்கள் கூறியதாவது
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த திராவிட அரசியல் கட்சிகளான திமுகவும், அதிமுகவும், வெற்று வாக்குறுதிகளை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று சுரண்டி வருகின்றார்கள். இதை இனம் கண்டு மக்களுக்கு போலியான இலவச வாக்குறுதிகளை தந்து ஏமாற்றுகிற திராவிட அரசியல் சக்திகளை தமிழர் நிலத்தில் இருந்தும், அரசியல் களத்தில் இருந்தும் அகற்ற வேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை கட்டமைத்து நடத்தி வருகிறார்.கட்சி ஆரம்பித்த போது எந்த தேசிய கட்சிகளுடனும் திராவிட கட்சிகளுடனும் எப்போதுமே கூட்டணி இல்லை என்று சொன்னார் அதை பத்தாண்டுகள் கடந்தும் கூட எந்தவித சமரசமும் செய்யாமல் கடைபிடித்து நடைபெறுகிற தேர்தல்களில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து தேர்தலை சந்திக்கும் நாம் தமிழர் கட்சியை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரிக்கிறது என தெரிவித்தார்கள்.