மாநாடு 18 February 2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை நடைபெறநிலையில் நேற்று மாலை 6 மணியோடு பிரச்சாரம் ஓய்ந்தது.
இதனால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9வது வார்டில் வேட்பாளராக நேரு நகரைச்சேர்ந்த மூர்த்தி மனைவி அனுசுயா என்பவர் திமுக சார்பில் போட்டியிட்டார். கடந்த 2 வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைவதால் அனுசியா காலையிலிருந்தே தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வந்தார் வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.அப்போது திடீரென அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார் அதிர்ச்சி அடைந்த ஆதரவாளர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவரை வரவழைத்து பரிசோதித்தனர் ஆனால் அனுசியா இறந்துவிட்டதாக தெரிவித்ததால் திமுகவினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர் அய்யப்பன் நெஞ்சுவலியால் இறந்தார் தற்போது தஞ்சை மாவட்டத்திலும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.