மாநாடு 18 February 2022
நாளை நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் அலுவலர்களும் தங்களது பணிகளை தீவிரமாக செய்து வருகின்றார்கள். அதேசமயம் கடந்த 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, பரத் சக்கரவர்த்தி ஆகியோர்கள் அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது அந்த வழக்கு என்னவென்றால் சென்னையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர் மேல் திமுகவினர் போஸ்டர் ஒட்டியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது அதை விசாரித்த நீதிபதிகள் அனுமதியின்றி போஸ்டர்களை யார் ஓட்டினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டிருந்தது அதுமட்டுமல்லாமல் அந்த போஸ்டர்களை உடனே அகற்ற வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் அகற்றுவதற்கான தொகையை அந்த வேட்பாளர்களிடம் வசூல் செய்ய வேண்டும் வேட்பாளர்களின் கணக்கில் அந்த செலவுத்தொகையை ஏற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்கள் இனியும் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கட்சிகளின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது.
தேர்தல் விதி நடத்தையில் இருக்கும்போது இவ்வாறான போஸ்டர்களை ஓட்டுவதும், அப்படி ஒட்டிய போஸ்டர்களை நாளை விடிந்தால் தேர்தல் என்று இருக்கின்ற இந்த வேளையில் கூட அகற்றாமல் இருப்பதும் சரியானதல்ல என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மாநகராட்சி அலுவலகமும், ஒட்டிய கட்சிக்காரர்களும் ,தேர்தல் அலுவலர்களும், எப்போதுதான் இந்த போஸ்டர்களை அகற்றுவார்கள் என்று பார்ப்போம்.