மாநாடு 19 February 2022
இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு அனைத்து இடங்களிலும் காலை 7மணி முதல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதி இல்லாத காரணத்தாலும் பல இடங்களில் சாலைகள் கூட சரி இல்லாத நிலையில் இந்தத் தேர்தல் நடக்கின்றது.
இந்த தேர்தலுக்காக போட்டியிடுபவர்கள் சனநாயகத்தை காப்பாற்றுவதற்காக அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தார்கள் நேற்றுவரை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக தான் இருக்கின்றது.
ஆளும் கட்சி கொடுப்பதை ஆண்ட கட்சி வேடிக்கை பார்ப்பதும்,ஆண்ட கட்சி கொடுப்பதை ஆளுங்கட்சி வேடிக்கை பார்ப்பதும் என்று அவர்களுக்குள் ஒரு சமரசம் செய்து கொண்டு தான் இந்த தேர்தலிலும் களம் காண்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலை சந்திக்கும் கட்சிகளுக்கு இடையே வேட்பாளர்களுக்கு கட்ட வேண்டிய பணத்தை கூட கட்ட முடியாதவர்களை மக்கள் பணி செய்ய வாய்ப்பு கொடுத்து தேர்தலை சந்திக்கிறது
நாம் தமிழர் கட்சி இவ்வாறான எளியவர்களை தேர்தலில் நிறுத்தி புதிய அரசியலை உருவாக்க துடிக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் 147 வது வார்டில் வேளாங்கண்ணி பள்ளியில் இப்போது வாக்களித்தார்.
இவர் முழுமையாக கொரோனா விதிகளை கடைப்பிடித்தார் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டு கையில் மை வைத்தவுடன் கை உரையும் அணிந்துகொண்டு வாக்கு செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த முறையே கொரோனா நடைமுறையை முழுமையாக கடை பிடிப்பதற்கான முன்னுதாரணம் இவ்வாறான விதிமுறைகளை வேறு எந்தெந்த தலைவர்கள் எல்லாம் கடைபிடித்து மக்களுக்கு முன்னுதாரணமாய் இருக்கிறார்கள் என்பதை செய்திகள் வாயிலாக கூட தெரிந்துக்கொள்ளலாம்.