மாநாடு 19 February 2022
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியாக சிவகாசி தனது முதல் தேர்தலை சந்திக்கிறது.
இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவுகள் விறுவிறுப்புடன் தொடங்கியது. வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து தங்களின் வாக்குகளை செலுத்தினார்கள்.
இந்நிலையில், சிவகாசி 26வது வார்டு வாக்குச்சாவடி இரத்தின விலாஸ் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டு இருந்தது.வாக்களிக்க வந்த மக்களிடம் இறுதி நேரத்தில் திமுக மற்றும் தேமுதிக கட்சியின் ஆதரவாளர்கள் ஆதரவு திரட்டிக்கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில், தேமுதிக ஆதரவாளரை திமுகவினர் கீழே தள்ளிவிட்டதாக தெரியவருகிறது.இதனால் தேமுதிகவினர் வாக்குவாதம் செய்து, வேலாயுதம் ரஸ்தா பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தை நடத்தினர்.
இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது காவல் துறையினர் தேமுதிகவினரை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.