மாநாடு 21 February 2022
சிதம்பரத்திலிருந்து காரைக்கால் நோக்கி வந்த தனியார் பேருந்து இரவு 8.30 மணி அளவில் சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்தது. அப்பொழுது புதிய பேருந்து நிலையத்திலிருந்து திரும்பும்போது 20க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து பேருந்தில் இருந்த நடத்துனர் பத்மநாபன், ஓட்டுனர் சபரி இருவரையும் கீழே இழுத்துப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்து விட்டு தலைமறைவாகிவிட்டனர்.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பத்மநாபன், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பேருந்து நிலையத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது