மாநாடு 21 February 2022
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் நாளைய தினம் தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதற்கு மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க கோரி முறையீடு செய்யப்பட்டது.
அதன்படி சிவகாசி மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு மத்திய அரசு பணியாளர்களை நியமிக்க கோரி முறையீடு செய்ய பட்டுள்ளது.
இந்த மனு அதிமுக நகர செயலாளர் பொன்சக்திவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.நாளைய வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும் கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரியும் மேலும் சிலர் முறையீடு செய்துள்ளனர்.ஆனால் தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. ஏனென்றால் மனு தாக்கல் செய்யாமல் முறையிடு ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது.இதை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.