Spread the love

மாநாடு 21 February 2022

தமிழக அரசின் மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவின் பேரில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் விற்கப்படும் பொருட்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ராகவன் தலைமையிலான குழுவினர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது காலாவதியான குளிர்பானங்கள் , ரசாயனம் தடவப்பட்ட உணவு பொருட்கள், தடை செய்யப்பட்ட குட்கா, பிளாஸ்டிக் பொருள்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், நாள் குறிப்பிடாத உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தும், கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியும் அபராதம் விதித்து எச்சரித்து சென்றனர்.
மேலும் பொதுமக்களிடமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்,

காலாவதியான உணவு பொருட்கள், குளிர்பானங்கள் விற்பனை செய்யப்படுவதை வாட்ஸ்அப் மூலம் 94440 42322 என்ற எண்ணிற்கு தெரிவித்தால் 24-மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

19520cookie-checkகாலாவதியான கலப்படமான பொருட்களை விற்பவர்கள் 24 மணி நேரத்தில் தண்டிக்கப்படுவார்கள்

Leave a Reply

error: Content is protected !!